டிசம்பர் 29, 2012

ரஹீம் வாத்தியாரும் சில மாங்காய்களும்...
பாலூர் ஊரின் அறிவிப்பு பலகையை கண்டவுடன் எனது இறுக்கையை விட்டு எழுந்து படிக்கட்டுக்கு அருகில் சென்றேன். 

பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் கம்பியில் சாய்ந்து நின்று கொண்டிருந்த நடத்துனர் என்னைப பார்த்து தனது புருவங்களை மேலே உயர்த்தி விழிகளை மட்டும் பேருந்துக்கு வெளியே நகர்த்தி தலையை லேசாக ஆட்டினார்.இங்கே இறங்கப் போகிறீர்களா என்று அர்த்தமாம். 

நானும் தலையை மேலிருந்து கீழாக ஒருமுறை ஆட்டினேன். சினேகப் புன்னகையுடன் விசிலை வாயில் வைத்து ஊதிவிட்டு
'பாலூர் ஆலமரம் எல்லாம் இறங்குங்க'

டிசம்பர் 23, 2012

விசுவக்குடி புதிய திருமண மண்டபம் திறப்பு எப்போது?
  இறைவனின் ஆசியோடும்,உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துக்களோடும் இரண்டு மனங்கள் ஒன்று சேர்கின்ற மகிழ்ச்சியான நாள்தான் திருமண நாள்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் மறக்க முடியாத நன்னாளாக இந்நாள் அமைந்துள்ளது. எனவே இந்த நாளை விசுவக்குடியின் அனைத்து தரப்பு மக்களும் மனமகிழ்ச்சியுடன் கொண்டாட

டிசம்பர் 17, 2012

விசுவக்குடி நீர்த்தேக்கம் அமைக்க கல்லாற்றின் குறுக்கே நடைப்பெற்றுவரும் பணிகள்
விசுவக்குடி நீர்த்தேக்கம் அமைக்க கல்லாற்றின் குறுக்கே நடைப்பெற்றுவரும் பணிகள்


டிசம்பர் 16, 2012

கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை அமைகிறது. பணிகள் தீவிரம்
பெரம்பலூர் மாவட்டம்  பச்சைமலையில் உற்பத்தியாகிவரும் கல்லாற்றில் அணை அமைக்க  விவசாயிகளால் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. விவசாயிகளின்  கோரிக்கையை ஏற்ற அரசு  தடுப்பணை கட்ட முன்வந்தது. 

அதற்கான ஒப்பந்தம் பெறப்பட்டு கடந்த செப்படம்பர் மாதம் 28 (2012) தேதி முதல் ஆரம்பகட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது.

டிசம்பர் 14, 2012

விசுவக்குடி, முஹம்மது பட்டினம் பொறுப்பாளராக ரியாஸ் அஹமது தேர்வு
பெரம்பலூரில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைபெற்றது.

அமைப்பின் மாநிலத் தேர்தல் அலுவலர் அமீர்பாட்ஷா தலைமை வகித்தார்.

இதில் வி.முஜ்புர் ரஹ்மான் மாவட்டத் தலைவராகவும், வி.களத்தூர் நகரத் தலைவராக அப்துல் ரஹீம், லப்பைகுடிகாடு நகரத் தலைவராக சித்திக் பாட்ஷா, விசுவக்குடி, முஹம்மது பட்டினம் பொறுப்பாளராக ரியாஸ் அஹமது, அரும்பாவூர், பூலாம்பாடி பெரியம்மாபாளையம் பகுதி பொறுப்பாளராக காஜாசெரீப், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக அபுபக்கர் சித்திக், எஸ். சையதுஹாரூன், முஹம்மது ரபீக் முஹம்மது, அலி, சர்தார் பாய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நவம்பர் 16, 2012

ஷரிஅத் சட்டத்தில் அத்துமீறி  தலையிடும் தமிழக அரசு- கொந்தளிப்பில் முஸ்லிம்  சமூகம்
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் வசித்துவரும் முகமது அலி என்ற மணமகனுக்கும் அதே மாவட்டம் குரும்பலூரை சேர்ந்த  ஷகிலா பானு  என்கிற மணமகளுக்கும் (16.11.2012) நாளை  காலை  10:30 மணியளவில் விசுவக்குடியில் உள்ள பள்ளிவாசலில் சுன்னத்வல் ஜமாத்தார்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற இருந்தது.

நேற்று 14.11.2012 அன்று சமூகநலததுறையில் இருந்து புகார் வந்ததாக கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தும் விதமாக பெண்னை அரசு காப்பகத்திற்கு

நவம்பர் 14, 2012

ஆரம்ப நிலையில் விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்திட்டம்

நாங்களே போய் பாக்கலாம்னு நெனச்சோம்!- விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆரம்பநிலையில் உள்ள காட்சி.
 புகைப்படம்: மார்டீன் ஆண்டனி - அன்னமங்கலம்

செப்டம்பர் 20, 2012

கல்வி தீபம் ஏற்றிய மௌலானா முஹம்மது பின் அலவி

பிறப்பு:

தோன்றின் புகழோடு தோன்றுக என்பர். நம் மௌலானா அவர்கள் அதற்கு இலக்கணமாகத் தோன்றினார்கள். இந்தியத் திருநாட்டின் தென்மேற்கு மாநிலமான கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் மன்னார்காடு தாலுக்கா வெட்டத்தூர் என்ற அழகிய மலைகள் சூழ் கிராமத்தில் 1896-ஆம் ஆண்டு மிக ஏழ்மையான குடும்பத்தில் அலவி, பாத்திமா பீவி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். முஹம்மது குடும்பத்தின் முதல் குழந்தையான இவருக்கு ஜெய்னுலாப்தீன் என்ற தம்பியும் உம்மாத்தம்மாள் என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள்  ஆவர். இவர்களின் குடும்பத்தை 'காராடன் குடும்பம்' என்று அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.

இளமை காலம்:

வறுமை தலை விரித்தாடிய இவரது இளமை பருவத்தின் ஆரம்பத்திலேயே தந்தையை இழந்துவிடுகிறார். தாயார் பாத்திமாபீவி அரவணைப்பில் வளர்ந்த மௌலானா அவர்கள் குடும்பத்தின் பொருளாதார தேவையை கருதி பள்ளி

செப்டம்பர் 12, 2012

இஸ்லாத்தை ஏற்ற ராஜ்குமார்
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் விவசாயம் செய்து வருபவர்கள் தான் இராமர் மற்றும்  இராஜம்மாள் தம்பதி. அவர்களின் இரண்டு மகன்களின் ஒருவர் தான் ராஜ்குமார். கடந்த ஐந்து வருடமாக குவைத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு முகமது யூசூப் என பெயர் மாற்றிக் கொண்டார்.

ஆகஸ்ட் 23, 2012

விசுவக்குடியில் ரமலான் உற்சாக கொண்டாட்டம்
விசுவக்குடி ஜமாத் தலைவர் அப்துல் ஹமீத், பள்ளியின் இமாம் சுலைமான் மற்றும் இளைஞர்கள் ''இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வோம்' என்ற உறுதிமொழியுடன் வாழ்த்துக்கள் கூறி புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
இஸ்லாமியர்களின் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை கடந்த திங்கள் அன்று (20.08.2012) விசுவக்குடியில் கொண்டாடப்பட்டது. 30 நாட்கள் நோன்பிருந்தோர், நோன்பிருந்து பண்டிகையை கொண்டாடினர். இதையொட்டி விசுவக்குடி மசூதியில் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. 

இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என சுமார் 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டி, தழுவி வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.

ஆகஸ்ட் 19, 2012

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு!

விசுவக்குடியில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியை விசுவக்குடி இணையதளம் பாராட்டுகிறது.

விசுவக்குடியில் தெரு எண் மூன்றில் வசித்து வருபவர் முஹம்மது மீரான். இவருடைய புதல்வி அனீஸ் பாத்திமா பெரம்பலூரில் உள்ள ஜோசப் பள்ளியில் ஆங்கல வழியில் பத்தாம் வகுப்பு தேர்வில் ஐநூறுக்கு 432 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மதிப்பெண் விவரம்:

தமிழ் - 88
ஆங்கிலம் 84
கணிதம் 75
அறிவியல் 92
சமூகஅறிவியல் 93
மொத்தம் 432

இவருடைய தந்தையான மீரான் சவுதி அரேபியாவில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – விசுவக்குடி இளைஞர்கள் குழு.

ஆகஸ்ட் 06, 2012

விசுவக்குடி இணையதளம்  உதயம்!
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வளைப்பூ-வாக செயல்பட்டு வந்த இந்த வளைபதிவு இணைதளமாகிறது.

நீண்ட நாட்களாக விசுவக்குடி மக்களுக்கு பொதுவாக ஓர் இணைதளம் தரவேண்டும், அதில் மக்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் நெடுநாளாக இருந்தது. அதை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு ஆகஸ்டு 2ம் தேதி முதல் இணையதளமாக மாற்றம் செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
குவைத்வாழ் விசுவக்குடி ஜமாத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு

குவைத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான விசுவக்குடி மக்கள் பல்வேறு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் குழு அமைத்து மாதத்திற்கு ஒருமுறை சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருவது வழக்கம். இந்த குழுவின் தலைவராக மௌலான மீராசா  உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி குவைத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் அரசியல் எழுச்சிக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்

ஆகஸ்ட் 05, 2012

விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டம்: அமைச்சர் ஆய்வு

 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை கிராமம் விசுவக்குடி ஊராட்சியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் இடத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

 பெரம்பலூர் மாவட்டத்தின் நீராதாரத்தை பெருக்கும் வகையில் 2001 -2006 ஆம் ஆண்டு விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அந்தத் திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக

மே 24, 2012

முகமது பட்டினம் - இறை இல்லம்
பெரம்பலூர் மாவட்டம் முகமது பட்டினத்தில் உள்ள பள்ளிவாசல் இது. நவீன இஸ்லாமிய கட்டிட கலைக்கு சான்றக திகழ்ந்து வருகிறது.

மே 22, 2012

சமூக எழுச்சி பொதுக் கூட்டத்தின் புகைப்படங்கள்
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில்  17.03.2011 அன்று நடைப்பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சமூகஎழுச்சிப் பொதுக்கூட்டத்தின் புகைப்படங்கள்
வரவேற்புரை நிகழ்த்தும் தமுமுக வின் 
துணைதலைவர் ஜாபர் அலி

மே 18, 2012

விசுவக்குடி - VISVAKUDI


 அமைவு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் தான் விசுவக்குடி.

பெயர்காரணம்:
குடி என்றால் சங்க காலத்தில் மக்களின் இருப்பிடங்களை குடி என சூட்டியிருக்கின்றன. விசுவாசம் மிகுந்த இறையடியார்கள் இங்கு குடியிருப்பதால் விசுவக்குடி என அழைக்கபடுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் இவ்வூர் பிஸ்மில்லாகுடி என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
எல்லை:
வடக்கு திசையில் முகமது பட்டினம் கிராமமும், தெற்கு,மேற்கு திசையில் உள்ள பச்சை மலையானது கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும். இந்த மலையில் உற்பத்தியாகிவரும் கல்லாறு விசுவக்குடி கிராம மக்களின் முக்கிய ஆறு. இது விசுவக்குடியின் குடிநீர் தேவையை மட்டுமில்லாது விவசாயத்திற்கு நீர் ஆதாரமாகவும் உள்ளது.

தொழில்: 
வடக்கு, தெற்கு, மேற்கு என மலைகளால் சூழப்பட்ட விசுவக்குடியை சுற்றிலும் வயல்வெளிகள் நிறைந்து காணபடுகிறது. முக்கிய தொழில் விவசாயம் ஆகும். 

மக்கள் தொகை:
2001ம் ஆண்டின் மக்கள் தொகை கணகெடுப்பின்படி ஆண்கள் 704 பேரும், பெண்கள் 611 பேர் என மொத்தம் 1330 பேர் உள்ளனர். 2011 ம் ஆண்டு கணக்கின்படி இங்கு 860 பேர் வாக்காளர்களாக உள்ளனர். 

சமூக குழுக்கள்:
தலித்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். 

வழிபாட்டு தளங்கள்:
இந்து சகோதரர்களின் கோயில்கள் மட்டுமில்லாது விசுவக்குடியில் இசுலாமியர்களின் தொழுகைக்கூடமான ஜூம்மா பள்ளிவாசல் என்கிற பெயரில் 85 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக இவ்வூரின் புராதானசின்னமாக நின்று கொண்டிருக்கிறது. இவ்வூர் மாவட்டத்தின் தலைநகரான பெரம்பலூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.

அரசியல்:
விசுவக்குடி அமைந்துள்ள அன்னமங்கலம் ஊராட்சியில் இவ்வூரை சேர்ந்த குதரத்துல்லா தலைவராக உள்ளார். இவ்வூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக கல்லாற்றின் குறுக்கே விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம் அமைக்க வேண்டும் என்பதாகும். 
விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்திட்டம்
தௌ.மு.ஜகரிய்யா...
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சைமலை கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும். அரியவகை மரங்களும், செடிகளும் காணப்படும் இந்த மலையின் பள்ளதாக்கு பகுதியில் உற்பத்தியாகிவரும் கல்லாறு,  மழை காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும், வறட்சியை போக்கவும் இந்த பகுதி மக்களால் நீண்ட காலமாக அணைக்கட்ட கோரிக்கை எழுப்பப்படுகிறது. 1942 ம் ஆண்டே ஆங்கிலேயர்களால் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கல்லாற்று பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள் போதிய பாசனம் இல்லாததால் தரிசாக மாறிவருகின்றன.  இதனால் பெரும்பாலான விவாசயிகள் மாற்று தொழிலை தேடி சென்றது மட்டுமில்லாது அருகில் உள்ள பெரம்பலூர் நகரத்திற்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

இதனை தடுக்க இந்த விசுவக்குடி பகுதியில் கல்லாற்றின் குறுக்கே அணை அமைப்பதே தீர்வாக அமையும் என கருதப்படுகிறது.  இதனால் கிராம தொழிலான விவசாயம் செழிப்பது மட்டுமில்லாது குடிநீர் தட்டுபாடும் குறையும் என்பது இந்த பகுதி விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

முதன் முதலில் நாகரிகங்கள் தோன்றியது ஆற்றங்கரைகளில் தான். அந்த நாகரிகம் அழந்ததற்கு காரணம் அந்த ஆற்று நீரை முறையாக பயன்படுத்தாதே காரணம் என கூறும் விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்
பச்சைமலையில் சொரோபோட்ஸ்கள்?

அரியலூர் பெரம்பலூர் பகுதியில் காணப்பட்ட
சொரோடோப்ஸ் வகை டைனோசர்

சொரோபோட்ஸ்கள்  என்றால் என்ன?

 அப்படி ஒரு இனம் இருந்ததா?  அப்படியென்றால் அந்த இனம் எப்படி அழிந்தது? என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விசுவக்குடி அருகே உள்ள பச்சைமலை பகுதியிலும் அவை வாழ்ந்திருக்கலாம் என்று எண்ண தோன்றுகிறது!.

2006ல் நடத்திய ஆய்வின் படி குறைந்தது 527 வெவ்வேறு டைனோசர் இனங்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 1844 தொன்மா இனங்கள் இருந்திருக்கக்கூடும் என கணிக்கின்றனர்.

ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத்தரையின் முழுவல்லமையுடன் வாழ்ந்து வந்த முதுகெழும்பு விலங்கினங்களான இவை, ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயிற்று என நம்பபடுகிறது.
 
பெரும்பாலும் டைனோசர்கள் இரண்டுகால்கள், நான்கு கால்கள் என பலவிதங்களில் வாழ்ந்துள்ளன. 

  நீரில் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை, நீரிலும் நிலத்திலும் வாழ்பவை, தாவரங்களை உண்பவை, மாமிசங்களை உண்பவை மற்றும் தாவரம் மாமிசம் இரண்டையும் உண்பவை என பலவகையான டைனோசர் இனங்கள் வாழ்ந்துள்ளன. 

இவற்றின் குறிப்பாக இந்த பெரம்பலூர் அரியலூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சொரோபோட்ஸ் நான்கு கால்களுடன் கழுத்து நீண்டு இருக்கும் வகையை சார்ந்தவை. இவை இலைதலைகளை உண்பவையாக இருந்துள்ளன.
அரியலூரில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட
சொரோபோட்ஸ் வகை டைனோசர்
முட்டைகள். இவை ஒவ்வொன்றும்
கால்பந்து அளவில் உள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் மு.ராம்குமார் தலைமையில் பேராசிரியர் கு.அன்பரசு, விரிவுரையாளர் இரா.சுரேஷ் மற்றும் ஆய்வு மாணவர்கள் தி.சுகந்தா, கு.சதீஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து அரியலூருக்கு வடகிழக்கே ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 அரியலூர் நகரை ஒட்டிய இப்பகுதியில் குவியல் குவியலாய் பல அடுக்குகளில் இருந்த டைனோசர் முட்டைப் படிமங்கள், முட்டையிட்ட இடங்கள், டைனோசர் எலும்புகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துச் சேகரித்திருக்கிறார்கள்.

இங்கிருந்து சுமார் 60 டைனோசர் முட்டைகளை எடுத்திருக்கும் இந்தக்குழு, மேலும் ஆயிரக்கனக்கான முட்டைகள் படிமங்களாக இருப்பதையும் கண்டறிந்துள்ளது. மணலில் வளை தோண்டி கூடு மாதிரி உருவாக்கி, அதில்முட்டைகள் இடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டிலும் ஆறேழு முட்டைகள் இருக்கின்றன. இப்படி எராளமான முட்டைக் குவியல்கள் இருப்பதால், ஒரு காலத்தில் இங்கு ஆயிரக்கனக்கான டைனோசர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து அளவில் இருக்கின்ற இந்த முட்டைகள் சொரோபோட்ஸ் எனப்படும் கழுத்து நீண்ட தாவர உண்ணி டைனோசோர் வகையை சேர்ந்தவை என்று ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் தற்போதுள்ள நிலப்பகுதிகள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதிகளாக இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடற்கரையாக இருந்தது.

பின்னர் நடைப்பெற்ற புவியியல் நிகழ்வுகளால் பூமிக்கு அடியில் உள்ள பாறை தட்டுகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி கொண்டிருப்பதால், அரியலூர் பகுதி மேலே உயர்த்தப்பட்டு கடல் நீர் வற்றியுள்ளது.

கடலை ஒட்டிய சதுப்பு நில பகுதிகளில்தான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான மித வெப்ப சீதோஷ்ணம் நிலவியது. நிலப்பகுதியின் உட்புறம் மிகுந்த வெப்பமும் வறட்சியும் கொண்டதாக இருந்தது. 

அரியலூர் அருகில் இப்போது வெற்றுப் பாறையாக இருக்கும் இந்தப் பகுதியில் அந்தக் காலத்தில் வற்றாத ஆறு ஓடி இருக்கிறது. நல்ல தண்ணீரோடு மிகப் பெரிய ஏரி இருந்திருக்கிறது. கடலும் மிக அருகாமையில் இருந்துள்ளது. எனவேதான் இங்கு டைனோசர்கள் பல்கிப் பெருகி பலகாலம் வாழ்ந்துள்ளன.

இவை அரியலூர் பெரம்பலூரிலிருந்து விசுவக்குடி அருகே உள்ள பச்சைமலை குறிப்பிட்ட தொலைவில் இருப்பதால் சொரோடோப்ஸ்கள் உணவைத் தேடி பச்சைமலை பகுதியில் அலைந்திருக்கலாம். ஏன் அவற்றின் இனப்பெருக்க வாழ்விடமாகக் கூட அமைந்திருக்கலாம்?


(தௌ.மு.ஜகரிய்யா...)
aahazack@gmail.com

மே 17, 2012

விசுவக்குடி கிராமம்
விசுவக்குடி தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். விசுவக்குடியை சுற்றிலும் வயல்வெளிகள் நிறைந்து காணப்படுகிறது. முக்கிய தொழில் விவசாயம். இவ்வூர் மாவட்டத்தின் தலைநகரான பெரம்பலூரிலிருந்து 14கி.மீ தொலைவில் உள்ளது.

விசுவக்குடி உங்களை அன்புடன் 
வரவேற்கும் காட்சி
விசுவக்குடியில் மழை வேண்டி பாடும் பாடல்
வருடத்தின் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் விசுவக்குடியில் மழைவேண்டி பாடல் பாடப்படுகிறது. பிச்சை உன்னை கேட்டேன்.... என தொடங்கும் அந்த பாடல் இவ்வூரின் அனைத்து தெருக்களை சுற்றிக் கொண்டே இந்த பாடல் பாடப்படுகிறது. குறைந்தது பத்து நாட்களாவது ஊரைச் சுற்றி பாடப்பட்டு இறுதி நாளில் இஸ்திஸ்கா தொழுகை தொழப்படுகிறது. இந்த பாடலை முகைதீன் ஆண்டவர் பாடிய பாடல் என்றும் கூறப்படுகிறது.

பிச்சை உன்னை கேட்டோம்
பிச்சை உன்னை கேட்டோம்
எங்களை ரட்சிக்க வேண்டும் அல்லா...
ரட்சகன் யாரும் இல்லை
உன்னை அன்றி
ரட்சித்த ரஹ்மானே...
அச்சத்துடனே உன்னை இச்சித்து கேட்கின்றோம்
அச்சத்துடனே உன்னை இச்சித்து கேட்கின்றோம்
இந்த உச்சித மேகத்தால்
மிச்ச மழை பெய்ய! .....(பிச்சை உன்னை)

வேதமுறை மறந்தோம்
வேதமுறை மறந்தோம்
நெறியும் நீதம் தவிழ்தோமே
பேத வழிநடக்க
இதன்படி சோதனையானதல்லா...
யாதும் அறியாத பேதகர் குற்றத்தை
யாதும் அறியாத பேதகர் குற்றத்தை
ஓதி பொறிந்திடும் ஆதியின் ஆதியாய் .....(பிச்சை உன்னை...)

மேகம் வழியாமல்
மேகம் வழியாமல்
எளியோர் சாகும் கெதியாச்சி
தாகம் மிகுதியால் லோகம் மயங்குதல்லா
வாகுடனே மழைமேகம் பொழியவே
வாகுடனே மழைமேகம் பொழியவே
ஏகனே மிக கெஞ்சி உன்னை கேட்கின்றோம் .....(பிச்சை உன்னை)

புல்லும் கருகுதல்லா
புல்லும் கருகுதல்லா
நெல்லும் குறையுதல்லா
பஞ்சத்தில் சொல்லும்
புறக்குதல்லா
வல்லவனே
தொல்லை எல்லாம்
தொலைந்திட
வல்லவனே
தொல்லை எல்லாம்
தொலைந்திட
சொல்லிபோ மேகமே
மழை பெய்ய
செய்தருள் .....(பிச்சை உன்னை)

மாடு ஒடுங்கிறதும்
மாடு ஒடுங்கிறதும்
பூவியில் ஆடு சொடுங்கிறதும்
ஏடு மடங்குறதும்
மரங்கள் பாடு
மடங்குறதும்
காடுகள் வாடுது கோடைமழை பெய்ய
காடுகள் வாடுது கோடைமழை பெய்ய
இந்த கோடை ஜலம் எங்கும்
கூடி வடிந்தருள் .....(பிச்சை உன்னை)

என்னது என்னதல்லா
என்னது என்னதல்லா
ஜனங்கள் கண்ணீரை ஓட்டுதல்லா
ஜனங்கள் அண்ணார்ந்து பார்குதல்லா
பொன்னான எண்ணத்தை
சுண்ணாம்பு பண்ணாமல்
பொன்னான எண்ணத்தை
சுண்ணாம்பு பண்ணாமல்
ஒன்ணான ரப்பே நீ
மழை பெய்ய
செய்தருள் .....(பிச்சை உன்னை)

விதைத்து தெளித்ததெல்லாம்
விதைத்து தெளித்ததெல்லாம்
முளைத்து மொத்தவும்
வாடுதல்லா
குற்றமற்ற
புழுவும் புற்பூண்டுகள்
சுத்தமாய் காயுதல்லா
நித்த மழைபெய்ய
வித்தையும் நாளுண்டும்
மொத்த மழைபெய்ய
உத்தாரம் செய்தருள் .....(பிச்சை உன்னை)

மீராமெகைதீன்
மீராமெகைதீன்
பணிந்து சீருடன்
கேட்ட பிச்சை
பீருபகாஒலிதீன் பொருட்டால்
நீரு தரவேண்டும்
ஏரிகள் நிறைந்திட
விதைகள் விதைந்திட
ஏரிகள் நிறைந்திட
விதைகள் விதைந்திட
நேராய் மழைபெய்ய
வேண்டுமே ரப்பனா.. .....(பிச்சை உன்னை)

                                            - முகைதீன் ஆண்டவர்

 தௌ.மு.ஜகரிய்யா

மார்ச் 24, 2012

கல்லாற்றில் அணை அமைக்க சட்டமன்றத்தில் உரையாற்றுவேன். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேச்சு!

பெரம்பலூர் அருகே விசுவக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக 17-03-2010 அன்று சமூக எழுச்சி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

மாலை 6 மணிக்கு புலவர் அலியார் திடலில் இறைமறை ஓதி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஜாமியா ஜன்னத்துன் நிஸ்வான் தலைவர் அப்துல் ஹை அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட தலைவர் மீராமொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுல்தான் மொய்தீன், மாவட்ட செயலாளர் தாஹிர் பாஷா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் பொறியாளர் ரசீத், தமுமுக மாவட்ட பொருளாளர் முகமது இலியாஸ், வேப்பந்தட்டை ஒன்றிய