நவம்பர் 16, 2012

ஷரிஅத் சட்டத்தில் அத்துமீறி தலையிடும் தமிழக அரசு- கொந்தளிப்பில் முஸ்லிம் சமூகம்

பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் வசித்துவரும் முகமது அலி என்ற மணமகனுக்கும் அதே மாவட்டம் குரும்பலூரை சேர்ந்த  ஷகிலா பானு  என்கிற மணமகளுக்கும் (16.11.2012) நாளை  காலை  10:30 மணியளவில் விசுவக்குடியில் உள்ள பள்ளிவாசலில் சுன்னத்வல் ஜமாத்தார்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற இருந்தது.

நேற்று 14.11.2012 அன்று சமூகநலததுறையில் இருந்து புகார் வந்ததாக கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தும் விதமாக பெண்னை அரசு காப்பகத்திற்கு
கொண்டு சென்றனர். 

மணமகன் வீட்டினரும், மணமகள் வீட்டினரும் இணைந்து பரிபூரண சம்மதத்துடன் ‎நடைபெற இந்த திருமணத்தில் இவர்களாக மூக்கை நுழைத்து, 'மணமகளுக்கு 17 ‎வயதுதான் ஆகின்றது; எனவே இது குழந்தைத் திருமணம்' என்று சட்டம் பேசி, ‎இந்தத் திருமணத்தை அநியாயமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.‎

இந்தக் உத்தரவை ‎பிறப்பித்த மாவட்டக் கலெக்டர் 'தரேஸ் அஹ்மது' என்பவர் ஒரு முஸ்லிம் ‎என்பதுதான் வேதனையிலும் வேதனை. ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடிய ‎கலக்டருக்கே முஸ்லிம்களுக்கு தனியாக சட்டம் இருப்பது தெரியவில்லை ‎என்றால் இவர் உண்மையாகவே கலெக்டருக்கு படித்து இந்த பொறுப்பிற்கு வந்தாரா? ‎என்று தெரியவில்லை.‎

  முஸ்லிம் பெண்கள் ‎பருவமடைந்து விட்டாலே திருமணம் முடிக்கலாம் என்று முஸ்லிம்களுக்கு என்று ‎தனிச்சட்டம் உள்ளது. அந்த அடிப்படையில்தான் 15 வயது நிரம்பிய ஒரு ‎பெண்ணுக்கு திருமணம் முடித்தது செல்லாது என்று அறிவிக்கச் சொல்லி டெல்லி ‎உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட போது, 15 வயது நிரம்பிய முஸ்லிம் ‎பெண் அவர் விரும்பியவரை மணமுடிக்கலாம் என்ற தீர்ப்பை உயர்நீதிமன்ற ‎நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

(இந்தியாவிலுள்ள ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள ‎உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு இந்தியா முழுவதையும் கட்டுப்படுத்தும்; ‎அதற்குக் கீழுள்ள கோர்ட்டுகளையும் கட்டுப்படுத்தும். அந்தத் தீர்ப்புகளும் சட்ட ‎அங்கீகாரத்திற்குள் வந்துவிடும்)

இது குழந்தை திருமணம் என்று கூறி இந்தத் திருமணத்தை நிறுத்தியுள்ளீர்களே! ‎ஒரு பெண் பருவமடைந்துவிட்டால் அவளை குழந்தை என்று எவனாவது ‎கூறுவானா? இதிலிருந்தே உங்களது அறியாமை வெளிப்படுகின்றதா? இல்லையா?. ‎அவள் பருவமடைந்ததால் தானே குழந்தை பெற்றெடுக்கின்றாள். இதையெல்லாம் ‎நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?‎

இந்த ‎லட்சணத்தில்தான் கலெக்டரும், ஆர்.டி.ஓ.வும்,  சமூக நலத்துறையும், காவல்துறை ‎அதிகாரிகளும் உள்ளார்கள் என்பதை நினைக்கும்போது கூடிய விரைவில் இந்தியா ‎வல்லரசாகிவிடும் என்ற நம்பிக்கை(?) நமக்கு வலுப் பெறுகின்றது.‎
 
 இதே போன்ற ஓரு பிரச்சினை பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் கடந்த ஜீன் மாதம் நடைப்பெற்றது.  இதை கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக ஆர்பாட்டம்  நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்பாட்டத்தின் வீடியோ காட்சியை காணவும்.


Previous Post
Next Post

post written by: