விசுவக்குடி அல் ஜன்னத் சமுதாய நலக் கூடத்தில் நேற்று 20ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூரில் உள்ள இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் முதல்வர் மௌலவி இஹ்சானுல்லா பாஜில் பாகவி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் நபிகள் நாயகத்து இஸ்லாமும், நவீன இஸ்லாமும் என்கிற தலைப்பில் சென்னை அடையாரில் உள்ள அல் ஹுதா அரபு கல்லூரியின் முதல்வர் சதீதுத்தீன் பாகவி சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.
விசுவக்குடி முஸ்லிம் ஜமாத்தார்களும், அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினரும் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.