டிசம்பர் 31, 2016

விசுவக்குடியில் பள்ளிவாசல் திறப்பு விழா
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் நேற்று புதிய பள்ளிவாசல் கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது. ஜமாத்துல் உலாமா சபையின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் முஹம்மது முனீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை இக்ரா  தீனியாத் பாடசாலையின்  ஆசிரியர் அஹமது ஹலீல் இறைமறை ஓதி துவங்கி வைத்தார்.

விசுவக்குடி ஜமாத்தார்கள் மற்றும் அல் அமீன் இஸ்லாமிய சங்கத்தினர் முன்னிலை வகித்த இந்நிகழ்வவை  அத்-தக்வா பள்ளிவாசல் செயலாளர் முஸ்தபா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சேலம் நூருல் இஸ்லாமிய அரபு கல்லூரியின் பேராசிரியர் மௌலான மௌலவி அபுதாஹிர் கலந்து கொண்டார்.

மேலும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் மௌலவி முஹம்மது மீராசா,  அத்-தக்வா பள்ளிவாசலின் இமாம் மௌலவி முஹம்மது சுலைமான்,  மௌலவி அப்துல் ஹை ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இந்நிகழ்வை இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் பேராசிரியர் மௌலவி அப்துர் ரஹ்மான் தொகுத்து வழங்கினார். இறுதியாக அல் அமீன் இஸ்லாமிய சங்கத்தின் ஜலாலுதீன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

டிசம்பர் 30, 2016

விசுவக்குடி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா படங்கள்...
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் அத்-தக்வா என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா டிசம்பர் 30 இன்று நடைப்பெற்று வருகிறது.














புதிய பள்ளிவாசல் பெயர் காரணம்
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி பள்ளிவாசலில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கப்பணி நடைப்பெற்று வந்தது.

பழைய பள்ளிவாசலை புதிய பள்ளவாசலாக மாற்றும் பொருட்டு அகற்றப்பட்டது. தற்போது புதிய பள்ளிவாசல் அமைக்கும் பொருட்டு பணிகள் ஆரம்பக்கப்பட்டு 90 சதவித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை டிசம்பர் 30 வெள்ளிகிழமை திறப்பு விழா காண இருக்கிறது.

இப்புதிய பள்ளிவாசலுக்கு நிர்வாகிகள் அத்-தக்வா என பெயர் சூட்டி உள்ளனர்.

தக்வா என்பது அரபு மொழி சொல்லாகும். அரபு மொழியில் வலுவூட்டதல் என பொருள்படும். இறை நம்பிக்கையை வலுவூட்டும் இடம் என்பதை குறிக்கும் விதமாக அத்-தக்வா என இந்த இறை இல்லத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

நம்பிக்கையை வலுபடுத்த நாளை மட்டுமல்ல எந்நாளும் வர ஆயத்தமாகுவோம்.
இரவில் ஒளிரும் பள்ளிவாசல்
விசுவக்குடியில் புதிய பள்ளிவாசல் இன்னும் சில மணி நேரங்களில் திறப்பு விழா காண தயாராகிறது.
தனால் மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டு ஜொலிக்கிறது.





நன்றி: பீஸ் முகமது

டிசம்பர் 29, 2016

புகைப்படமாக மாறிய பள்ளிவாசல்
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் இருந்த பழைய பள்ளிவாசல் 1920 ஆம் ஆண்டு சுண்ணாம்பு மற்றும் காரைகளால் கட்டப்பட்டது. இவற்றின் மேல் கூரை பர்மாவில் இருந்து எடுத்து வரப்பட்ட தேக்கால் ஆனது. 

இப்பள்ளிவாசலில் 10 முதல் 20 அடி வரை உயரமுள்ள தூண்கள் மிகவும் வேலைபாடுகளுடன் நுணுக்கமாக இருந்தது. சிறிய மினாராக்கல் 20 பெரிய மினாராக்கள் 2 என மொத்தம் 22மினாராக்கள் இருந்தது. 

புதிய பள்ளிவாசல் அமைக்கும் பொருட்டு சுமார் 95 ஆண்டுகள் தாஃவா பணி செய்துவந்த பள்ளிவாசல் புதிய பள்ளிவாசல் அமைக்கும் பொருட்டு அகற்றப்பட்டது. இஸ்லாமிய கட்டிடகலைக்கு சான்றாக இருந்த பழைய பள்ளிவாசலின் அழகிய தோற்றங்கள்.





மே 20, 2016

தமிழக தேர்தல் 2016ல்  வெற்றி பெற்ற 5 முஸ்லிம்கள்
1. அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் எம். தமிமுன் அன்சாரி நாகை தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

2. வாணியம்பாடி தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வின் நிலோபர்.

3. திமுக கூட்டணியில் இடம்பெற்று கடையநல்லூர் தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அபுபக்கர்.

4. செஞ்சி தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மஸ்தான்.

5. பாளையங்கோட்டை தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வின் மைதின் கான்.
100% சதவிகிதம் தேர்ச்சி பெற்ற நம் பள்ளி
கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற 2016 ஆம் ஆண்டுகான +2 பொது தேர்வு முடிவுகள் நேற்று (17) வெளியிடப்பட்டது.

இதில் மாநில அளவில் 96.73 சதவீகிதம் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றது.

மாவட்டத்தில் உள்ள மொத்த 67 மேல்நிலைப் பள்ளிகளில் 25 பள்ளிகள் 100% சதவீகித தேர்ச்சி பெற்றுள்ளன.

இதில் நம் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள சிறுமலர் மேல் நிலைப் பள்ளியும் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது.

இதில் பா.மணிவேல் என்ற மாணவர் 1072 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

100 சதவிகித தேர்ச்சி பெற முயற்சி செய்த தலைமை ஆசிரியரையும், ஆசிரியர்களையும் பாராட்டி மகிழ்வோம்.

இப்பள்ளியின் தாரக மந்திரம்  "பக்தியாய் செபி.  அயராது உழை"  என்பதாகும்.

பிப்ரவரி 27, 2016

காணொளிக் காட்சி மூலம் விசுவக்குடி அணை திறப்பு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடியில் ரூ.33.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணையை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

கல்லாறு ஓடையின் குறுக்கே விசுவக்குடியில் ரூ. 33.7 கோடி மதிப்பில் அணை கட்டும் பணிகள் நிறைவடைந்தன.

இதன் மூலம் 40.67 மில்லியன் கன அடி நீரை 10.30 மீ. ஆழத்துக்கு நீரை சேமிக்கலாம். அணையில் 11.75 மீ. உயரத்துக்கு நீர்ப்போக்கி அமைக்கப்பட்டுள்ளது. அணையின் உபரி நீரானது வெங்கலம் பெரிய ஏரியில் கலக்கிறது.இதனால் நேரடியாக 859 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும்.

இந்த அணையை முதல்வர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து,மாவட்ட வருவாய் அலுவலர் ச. மீனாட்சி, பெரம்பலூர் தொகுதி எம்.பி ஆர்.பி. மருதராஜா, அதிமுக மாவட்டச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன், எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் அணைப் பகுதியில் வெளியேறிய நீருக்கு மலர் தூவி வரவேற்றனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் கோ. சகுந்தலா, பொது பணித்துறை தலைமைப் பொறியாளர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ஜனவரி 14, 2016

பச்சைமலையில் உருவான திரைபடங்கள்
பெரம்பலூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களின் மையபகுதியில் பச்சைமலை உள்ளது. பச்சைமலை மனம் மயங்கும் அழகு, திரைப்படத் துறையினரையும் மோகம் கொள்ள வைத்துள்ளது. பச்சைமலை அழகிய சூழலில் திரைப்படங்களும் உருவாகியுள்ளது.

செம்பருத்தி
1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைபடமாகும். ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைபடத்தில் பிரசாத், ரோஜா, மன்சூர் அலிகான், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
https://www.youtube.com/watch?app=desktop&persist_app=1&v=5GjOz1itSdU

தகப்பன்சாமி
2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைபடமாகும். சிவ சண்முகம் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் பிரசாத், பூஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=JnC_VMYhGqU

பாடல்கள்
* 1990 ஆம் ஆண்டு நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் கிழக்கு வாசல் படத்தில் "பச்சைமலை பூவு நீ உச்சிமலை தேரு" என்ற பாடல் வெளிவந்துள்ளது.
https://www.youtube.com/watch?v=znmONb4Vchs

* 1988 ஆம் ஆண்டு கே.பாக்கியராஜ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு திரைப்படத்தில் " பச்சைமலை சாமி ஒண்ணு" என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.

* 1979 ஆம் ஆண்டு சிவக்குமார் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ரோசாப்பூ ரவிக்கைகாரி படத்தில் "உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்சகிளி பச்சைமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்" என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இளையராஜா இசையில் புலமைப்பித்தன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=L2arnMngHr8