விசுவக்குடியில் புதிய பள்ளிவாசல் கட்டும் பணியை நோக்கமாக கொண்டு வேலை செய்யும் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் பொதுக்குழு 18.09.2010 சனிகிழமை அன்று இரவு விசுவக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் நடைப்பெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வை பள்ளியின் இமாம் மௌலான சுலைமான் ரஹ்மானி அவர்கள் இறைமறை ஓதி துவங்கி வைத்தார். நிர்வாக கமிட்டியின் செயற்க்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
செப்டம்பர் 21, 2010
புதிய பள்ளிவாசல் கட்டுதல், கிராம முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற குறிப்பிட்ட பணியை நோக்கமாக கொண்டு வேலை செய்யும் நிர்வாகக்குழு கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி விசுவக்குடியில் ஏற்படுத்தப்பட்டது. அனைத்து செயல்களையும் ஜமாத்தும் நிர்வாகக் குழுவும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது ஒரு மாதமே ஆன நிலையில் நிர்வாகக்குழு நிர்வாகிகளை மாற்றம் செய்யதுள்ளது.