நவம்பர் 26, 2011

விசுவக்குடியில் பண்பு ஒழுக்க பயிற்சி முகாம்

பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இளம் போராளிகள் எனப்படும் மாணவரணி சார்பில்  தர்பியா எனும் பண்பு ஒழுக்க பயிற்சி முகாம் கடந்த 13.11.2011 ஞாயிறு அன்று விசுவக்குடி பெண்கள் நிஸ்வானில் நடைப்பெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் குதரத்துல்லா தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாநில துணை பொதுச் செயலாளர் ரிஃபாயி அவர்கள் தலைமை பண்பு என்கிற தலைப்பில உரையாற்றினார்.
 
 மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொது செயாலளர் அப்துல் சமது அவர்கள் சமுதாய சிந்தனை என்கிற தலைப்பில் உரையாற்றினார். தமுமுகவின் மாநில உலமாக்கள் அணி செயலாளர் காரைக்கால் யூசுப் எஸ்.பி அவர்கள் ஈமானும் சிர்க்கும் என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். தமுமுக வின் தலைமைகழக பேச்சாளர் கோவை ஜெய்னுலாப்தீன் தொழுகையின் அவசியத்தை பற்றி விளக்கினார். தகவல் பெறும் உரிமை சட்டத்தை பற்றி வழக்கறிஞர் தமிழகன் விவரித்தார்.

நூற்றுக்கும் மேற்ப்பட்டடோர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியை மனிதநேய மக்கள் கட்சியின் வேப்பந்தட்டை ஓன்றிய செயலாளர் சபியுல்லா அவர்கள் வரவேற்றார். இறுதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கிளை செயலாளர் முஹம்மது யாசின் நன்றி கூறினார்.

Previous Post
Next Post

post written by: