ஆகஸ்ட் 09, 2014

விசுவக்குடி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க கோரி போஸ்டர்.
விசுவக்குடி பகுதியில் உள்ள மோசமான சாலைகளை சீரமைக்க கோரி பொது மக்களின் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.
 தினகரன் செய்தி: பக்கம் 17 திருச்சி பதிப்பு -ஆகஸ்டு 9
படத்தை பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும்

ஆகஸ்ட் 01, 2014

இன்ப சுற்றுலா - ரஞ்சன்குடி கோட்டை
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்க்கும் சுற்றுலாத் தளம் ரஞ்சன்குடி கோட்டை.பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 18கி.மீ. தொலைவில்,மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன்குடியில் இக்கோட்டை அமைந்துள்ளது. 

16ம் நூற்றாண்டின் இறுதியில் குன்றின் மீது அமைக்கப்பட்ட இந்த கோட்டைக்கான கட்டுமானப்பணி, நவாப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்த தூங்கானை மறவன் என்ற குறுநிலமன்னரால் தொடங்கப்பட்டது.

இதற்கு ஆற்காடு நவாப்கோட்டை, ரஞ்சன்குடி கோட்டை, குன்றின்மீது

ஜூலை 29, 2014

விசுவக்குடி ரமலான் கொண்டாட்டம் 2014

புனித ரமலான் பெருநாளான இன்று விசுவக்குடியில் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டிதழுவி தங்களின் இனிமையான வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.
மேலும் இளைஞர்கள் அனைவரும் காஸாவில் இஸ்ரேலினால் அரங்கேற்றப்படும் கொடூரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என தங்களின் ஆடைகளிலும், கைகளிலும் பேட்ஜ்களை தாங்கி இருந்தனர்.

ஜூலை 18, 2014

விசுவக்குடியில் சினிமா படபிடிப்பு
விசுவக்குடியில் காதலிக்கிறேன் என்கிற படத்தின் காட்சிகள் இன்று படமாக்கப்பட்டது. ஊராட்சியின் தலைவர் குதரத்துல்லா அவர்கள் குணசித்திர வேடத்தில் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டது. இதில் அவருடைய வீடு படபிடிப்பு தளமாக பயன்படுத்தப்பட்டது.

ஜூன் 23, 2014

விசுவக்குடி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க மமக ஆட்சியரிடம் மனு
திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அரங்கிள் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனிதநேய மக்கள் கட்சி பழுதான சாலையை சீரமைக்க வேண்டி கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்தது.

பெரம்பலூர் மாவட்டம் எசனையிலிருந்து அன்னமங்கலம் ஊராட்சி பிள்ளையார் பாளையம் வரை உள்ள தார் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது.

சுமார் 8 கிலோமீட்டர் உள்ள இந்த சாலையை, பிள்ளையார் பாளையம், முகமது பட்டினம், விசுவக்குடி மற்றும் அன்னமங்கலத்தில் உள்ள சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமாக மக்கள் இந்த சாலையில் பயணம் செய்யவும்

மே 29, 2014

விசுவக்குடி தீனியாத் வழிகாட்டி மையம் நடத்திய கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
விசுவக்குடி தீனியாத் வழிகாட்டி மையம் நடத்திய கோடைகால பயிற்சி முகாம் நிறைவுவிழா (28.05.2014) புதன் அன்று அல்-ஜன்னத் சமுதாய நலகூடத்தில் நடைப்பெற்றது.

மாலை 6மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு விசுவக்குடியின் ஜமாத் தலைவர் காதர்அலி தலைமை தாங்கினார்.

விசுவக்குடி பள்ளிவாசலின் இமாம் முஹம்மது சுலைமான் அவர்கள் இறைமறையுடன் தொடங்கிய நிகழ்ச்சி, அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது.

விசுவக்குடி மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்ட ஈரோடு முஹம்மது தவ்ஃபீக் ஹஸனி கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், பெரம்பலூர் நூர்

மே 18, 2014

அன்னமங்கலத்தில் புனித தோமையாரின் 68ம் ஆண்டு பெருவிழா
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கத்தில் புனித தோமையாரின் 68ம் ஆண்டு பெருவிழா (மே17,18) ஆகிய தேதிகளில் நடைபெறுவதை முன்னிட்டு அங்குள்ள கிருத்துவ தேவாலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் காட்சி.

ஏப்ரல் 24, 2014

விசுவக்குடி: அமைதியான முறையில் தேர்தல்
விசுவக்குடியில் இன்று நடைப்பெற்ற 16வது மக்களவை தேர்தலில் 72% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் உள்ள 1021 வாக்குகளில் 720 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில் ஆண்கள் வாக்கு 307, பெண்கள் வாக்கு 413 ஆகும்.
விசுவக்குடியில் இந்திய பிரதமரை தேர்தெடுக்க
வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்.

ஏப்ரல் 11, 2014

விசுவக்குடியில் மனிதநேய மக்கள் கட்சி தீவிர வாக்கு சேகரிப்பு
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறையில் போட்டியிடுகிறது. நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள், திமுக, மனிதநேய மக்கள் கட்சி கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் விசுவக்குடியில் பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் சீமானூர் பிரபு சார்பாக வாக்கு சேகரித்தனர்.


பிப்ரவரி 25, 2014

மட்டைப்பந்துப் போட்டி: விசுவக்குடி அணி வெற்றி
குவைத்தின் 53 வது தேசிய தினத்தை முன்னிட்டு குவைத்தில் மட்டைபந்து போட்டிகள் நடைப்பெற்றது.

குவைத் இஸ்லாமிய சங்கம் நடத்திய இப்போட்டியில் 8 அணிகள் பங்கு பெற்றன. குவைத்தில் உள்ள கைதான் பகுதியில் இன்று பிப்ரவரி 25 மாலை நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் விசுவக்குடி அணியும், மும்பை தமிழர் அணியும் நேருக்கு நேர் மோதின.

டாஸ் வென்ற மும்பை தமிழர் அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட பத்து ஓவர்களில் 53 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பிறகு களம் இறங்கிய விசுவக்குடி அணி 7ஓவர்களில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜனவரி 16, 2014

புகைப்படமே  அடையாளம்...!
காலம் கடந்தும்
வாய்த்திருக்கும்....
சுவடுகளாய்...
அழகியதோர் பள்ளிவாசல்...!

விசுவக்குடி
மகான்களின்
நினைவுச் சின்னம்...!

திண்ணம்
காக்கக் கூடியதோர்

புனிதத்தளம்...!