டிசம்பர் 23, 2012

விசுவக்குடி புதிய திருமண மண்டபம் திறப்பு எப்போது?

  இறைவனின் ஆசியோடும்,உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துக்களோடும் இரண்டு மனங்கள் ஒன்று சேர்கின்ற மகிழ்ச்சியான நாள்தான் திருமண நாள்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் மறக்க முடியாத நன்னாளாக இந்நாள் அமைந்துள்ளது. எனவே இந்த நாளை விசுவக்குடியின் அனைத்து தரப்பு மக்களும் மனமகிழ்ச்சியுடன் கொண்டாட
வகைசெய்யும் விதமாக புதிய திருமண மண்டபம் உருவாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2010 ஆம் வருடம் டிசம்பர் மாதம்  15 தேதி முதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. சுமார் 250 நபர்கள் அமரும் வகையில் வடிவமைக்கபட்டு வருகிறது.

திருமணம் மட்டுமில்லாது இன்னபிற நிகழ்ச்சிகளையும் நடத்தும் விதமாக அமையவிருக்கம் இந்த திருமண மண்டபம் எப்போது திறக்கப்படும், இந்த திருமண மண்டபத்திற்கு என்ன பெயர் சூட்ட போகிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள  மக்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த திருமண மண்டபம் வருகிற 2013ம் வருடம் ஜனவரி மாதம் 25ம் தேதி மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ்....

 மொத்தத்தில் இத்திருமண மண்டபம் எமதூர் மக்களின் இனிய நினைவுகளை தாங்கி நிற்க்க போகிறது. 

தொடர்புடைய இணைப்புகள்:
Previous Post
Next Post

post written by: