டிசம்பர் 31, 2016

விசுவக்குடியில் பள்ளிவாசல் திறப்பு விழா
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் நேற்று புதிய பள்ளிவாசல் கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது. ஜமாத்துல் உலாமா சபையின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் முஹம்மது முனீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை இக்ரா  தீனியாத் பாடசாலையின்  ஆசிரியர் அஹமது ஹலீல் இறைமறை ஓதி துவங்கி வைத்தார்.

விசுவக்குடி ஜமாத்தார்கள் மற்றும் அல் அமீன் இஸ்லாமிய சங்கத்தினர் முன்னிலை வகித்த இந்நிகழ்வவை  அத்-தக்வா பள்ளிவாசல் செயலாளர் முஸ்தபா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சேலம் நூருல் இஸ்லாமிய அரபு கல்லூரியின் பேராசிரியர் மௌலான மௌலவி அபுதாஹிர் கலந்து கொண்டார்.

மேலும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் மௌலவி முஹம்மது மீராசா,  அத்-தக்வா பள்ளிவாசலின் இமாம் மௌலவி முஹம்மது சுலைமான்,  மௌலவி அப்துல் ஹை ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இந்நிகழ்வை இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் பேராசிரியர் மௌலவி அப்துர் ரஹ்மான் தொகுத்து வழங்கினார். இறுதியாக அல் அமீன் இஸ்லாமிய சங்கத்தின் ஜலாலுதீன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

டிசம்பர் 30, 2016

விசுவக்குடி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா படங்கள்...
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் அத்-தக்வா என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா டிசம்பர் 30 இன்று நடைப்பெற்று வருகிறது.














புதிய பள்ளிவாசல் பெயர் காரணம்
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி பள்ளிவாசலில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கப்பணி நடைப்பெற்று வந்தது.

பழைய பள்ளிவாசலை புதிய பள்ளவாசலாக மாற்றும் பொருட்டு அகற்றப்பட்டது. தற்போது புதிய பள்ளிவாசல் அமைக்கும் பொருட்டு பணிகள் ஆரம்பக்கப்பட்டு 90 சதவித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை டிசம்பர் 30 வெள்ளிகிழமை திறப்பு விழா காண இருக்கிறது.

இப்புதிய பள்ளிவாசலுக்கு நிர்வாகிகள் அத்-தக்வா என பெயர் சூட்டி உள்ளனர்.

தக்வா என்பது அரபு மொழி சொல்லாகும். அரபு மொழியில் வலுவூட்டதல் என பொருள்படும். இறை நம்பிக்கையை வலுவூட்டும் இடம் என்பதை குறிக்கும் விதமாக அத்-தக்வா என இந்த இறை இல்லத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

நம்பிக்கையை வலுபடுத்த நாளை மட்டுமல்ல எந்நாளும் வர ஆயத்தமாகுவோம்.
இரவில் ஒளிரும் பள்ளிவாசல்
விசுவக்குடியில் புதிய பள்ளிவாசல் இன்னும் சில மணி நேரங்களில் திறப்பு விழா காண தயாராகிறது.
தனால் மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டு ஜொலிக்கிறது.





நன்றி: பீஸ் முகமது

டிசம்பர் 29, 2016

புகைப்படமாக மாறிய பள்ளிவாசல்
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் இருந்த பழைய பள்ளிவாசல் 1920 ஆம் ஆண்டு சுண்ணாம்பு மற்றும் காரைகளால் கட்டப்பட்டது. இவற்றின் மேல் கூரை பர்மாவில் இருந்து எடுத்து வரப்பட்ட தேக்கால் ஆனது. 

இப்பள்ளிவாசலில் 10 முதல் 20 அடி வரை உயரமுள்ள தூண்கள் மிகவும் வேலைபாடுகளுடன் நுணுக்கமாக இருந்தது. சிறிய மினாராக்கல் 20 பெரிய மினாராக்கள் 2 என மொத்தம் 22மினாராக்கள் இருந்தது. 

புதிய பள்ளிவாசல் அமைக்கும் பொருட்டு சுமார் 95 ஆண்டுகள் தாஃவா பணி செய்துவந்த பள்ளிவாசல் புதிய பள்ளிவாசல் அமைக்கும் பொருட்டு அகற்றப்பட்டது. இஸ்லாமிய கட்டிடகலைக்கு சான்றாக இருந்த பழைய பள்ளிவாசலின் அழகிய தோற்றங்கள்.