ஜனவரி 26, 2020

விசுவக்குடி பள்ளிவாசலில் தேசியகொடி ஏற்றம்
நாட்டின் 71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 இன்று பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் பள்ளிவாசல் முன்பு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி குடியரசு தினத்தை கொண்டாடினர். 



விசுவக்குடி அத்-தக்வா பள்ளிவாசலின் துணை தலைவரும், அன்னமங்கலம் ஊராட்சியின் 2வது வார்டு உறுப்பினரும், தமுமுக மாவட்ட செயலாளருமான குதரத்துல்லா குடியரசு தின உரை நிகழ்த்தினார்.

தேசியக்கொடியை ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் Y.அப்துல் சலாம் ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகளான ஓய்வு ஆசிரியர் பொருளாளர் அமானுல்லா,  தலைவர் அப்துல் ரசாக், செயலாளர் முஸ்தபா, இளைஞர்கள் என பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.








ஜனவரி 06, 2020

விசுவக்குடி வார்டு உறுப்பினர் பதவி ஏற்பு.!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள மொத்தம் 12 ஊராட்சி வார்டுகளுக்கு தேர்தல்  நடைப்பெற்றது. இதில் வார்டு எண் இரண்டில் விசுவக்குடி குதரத்துல்லா எனும் வதூத் சங்கு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


இதற்கான பதவியேற்பு விழா இன்று திங்கட்கிழமை (ஜனவரி 06, 2020) காலை 10 மணிக்கு அன்னமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இவர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் தன்னைத்தானே பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.





அன்னமங்கலம் ஊராட்சித் தலைவர் பதவி ஏற்பு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில் அன்னமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டு மருதாம்மாள் செல்வகுமார் வெற்றி பெற்றார். இதற்கான பதவியேற்புவிழா இன்று (ஜனவரி 06, 2020) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அன்னமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக மருதாம்மாள் செல்வகுமார் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.