பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் இன்று திங்கள் கிழமை(04.03.18) காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கொடியேற்றுதல் மற்றும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைப்பெற்றது.
விசுவக்குடி பேருந்து நிறுத்தத்தில் இரவு 7 மணி அளவில் நடைப்பெற்ற இந்நிகழ்வை சேட் எனும் முகம்மது மீரான் தலைமை ஏற்று நடத்தினார்.
விசுவக்குடி காங்கிரஸ் கமிட்டி தலைவர் இப்ராஹிம், ஜமாத் தலைவர் காதர் அலி, அபுல் ஹஸன், முகமது பாரூக், தௌலத் அலி, காஜா மொய்தீன் போன்றோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்வன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட பொருளாளர் ஆசை தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், தங்கவேல், அருணாசலம், மாவட்ட பொது செயலாளர் சாமிதுரை, துரை ராமசந்திரன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சித் குமார், மாவட்ட துணை தலைவர் அருணாசலம், செல்வம், சுந்தர் ராஜ், சின்னசாமி, முத்து கிருஸ்ணன், தொகுதி ஊடகப் பிரிவு தலைவர் செந்தில் பிரசாத், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


