செப்டம்பர் 25, 2021

விசுவக்குடி அணை பாசன கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (செப்.24) கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.

அப்போது விசுவக்குடி கிராமத்தை சார்ந்த அப்துல் ஹக் என்பவரது தலைமையில் கிராம மக்கள் சார்பாக கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ளது விசுவக்குடி கிராமம்.

இவ்வூரின் அருகே பச்சை மலை மற்றும் செம்மலை இடையே பாய்ந்தோடும் கல்லாற்றின் குறுக்கே சுமார் 40 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் விதமாக விசுவக்குடி அணை ரூ.33.7 கோடி மதிப்பீட்டில் 27.02.2016 அன்று கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

இந்த இரண்டு மலைகளையும் இணைக்கும் வகையில் 12.30 மீட்டர் உயரம் 665 மீட்டர் நீளத்தில் கரை அமைக்கப்பட்டு அதில் இரண்டு மதகுகள் அமைக்கப்பட்டு பொது பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மதகுகள் மூலம் இரண்டு பாசன கால்வாய்கள் அமைக்கப்படும் எனவும், அதில் இடது பக்க பாசன கால்வாய் ஆயிரத்து 750 மீட்டர் நீளமும், வலதுபக்க பாசன கால்வாய் 2 ஆயிரத்து 450 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 5 வருடம் 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பாசன கால்வாய் அமைக்கப்படவில்லை. இதற்கிடையில் விசுவக்குடி அணை இரண்டு முறை நிரம்பி சட்டமன்ற உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாசன கால்வாய் மூலம் விசுவக்குடி, அன்னமங்கலம், தொண்டமாந்துறை போன்ற கிராமங்களில் உள்ள 859 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், பாசன கால்வாய் மூலம் செரிவூட்டப்படும் நீரால் மறைமுகமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதிபெறும்.

தற்போது அணையில் 3 மீட்டர் உயரத்திற்கு சுமார் 10 மில்லியன் கன அடி நீர் தேங்கி நிற்கிறது.

எனவே விளைநிலங்களுக்கு நீர் ஆதாரத்தை உறுதி செய்யும் விதமாகவும், விவசாய பெருமக்கள் பயனடையும் விதமாகவும் கிடப்பில் உள்ள பாசன கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி விவசாயிகள் சார்பாக கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை கோரிக்கை குறித்து குரல்கொடுத்து பேசினார்.

செப்டம்பர் 23, 2021

விசுவக்குடி பகுதி விவசாயிகளுக்கான அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்,

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை (செப்.24) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட விசுவக்குடி அணை பாசன கால்வாய் பணிகள், கல்லாற்று நீரை பகிர்ந்து கொள்வதில் விசுவக்குடி மற்றும் வெங்கலம் கிராமங்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை கோரிக்கையாக முன்வைக்க உள்ளோம். (இன்ஷாஅல்லாஹ்)

இதில், விவசாயிகள் சார்பாக பங்கேற்று, குறைகளை தெரிவித்து பயனடையலாம் வாரீர் என அழைக்கிறோம். 

சமூக ஆர்வலர்கள்

•அப்துல் ஹக்

•முஹம்மது ஜகரிய்யா

செப்டம்பர் 21, 2021

விசுவக்குடி ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது விசுவக்குடி கிராமம். 

இவ்வூரின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியை சுற்றியுள்ள விளை நிலங்களுக்கும் கிணறுகளுக்கும் நீராதரமாக இந்த ஏரி உள்ளது. 

இந்த ஏரி பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாததால் கருவேல மரங்களாகவும், மண்மேடுகளாகவும் காட்சி அளிக்கிறது.

எனவே இந்த ஏரியில் உள்ள கருவேல மரங்களையும், மண்மேடுகளையும் அகற்றி ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தூர்வாரி ஆழப்படுத்தி *இப்பகுதி மக்களின் நீர் ஆதாரத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.






விசுவக்குடி ஏரியின் நடுவில் உள்ள மின் கம்பம் அகற்ற கோரிக்கை


விசுவக்குடி ஏரியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி மின்சாரத்தை மாற்று வழியில் கொண்டு சொல்லுமாறு வேப்பந்தட்டை உதவி மின் பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் விவரம்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது விசுவக்குடி கிராமம். 

இவ்வூரின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியை சுற்றியுள்ள விளை நிலங்களுக்கும் கிணறுகளுக்கும் நீராதரமாக இந்த ஏரி உள்ளது. 

இந்த ஏரியின் நடுவே உள்ள மண்மேட்டின் மீதுள்ள மீன்கம்பம் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் நீர்நிலையான இந்த ஏரியில் நீர் நிரம்பினால் மண்மேடு கரைந்து மின் கம்பம் கீழே விழும் அபாயம் உள்ளது.

எனவே நீர் நிலையான ஏரியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி மின்சாரத்தை மாற்று வழியில் கொண்டு சொல்லுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை வேப்பந்தட்டை உதவி மின் பொறியாளர் செந்தில் குமாரிடம் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் செல்வகுமார் வழங்கினார். அப்போது சமூக ஆர்வலர் முஹம்மது ஜகரிய்யா, 2வது வார்டு உறுப்பினர் குதரத்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.




ஏப்ரல் 06, 2021

விசுவக்குடி வாக்குச்சாவடி நிலவரம்


சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு (06.04.2021) விசுவக்குடி வாக்குச்சாவடியில் 7 மணியுடன் முடிந்தது. மொத்தமுள்ள 1146 வாக்குகளில் 818 வாக்குகள் பதிவானது. இதில் ஆண்களின் வாக்குகள் 342 பெண்களின் வாக்குகள் 476 என மொத்தம் 71.3% சதவீத வாக்குகள் பதிவானது.

மார்ச் 29, 2021

விசுவக்குடியில் திமுக வேட்பாளர் பிரசாரம்

விசுவக்குடியில் திமுக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம். பிரபாகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் . 

 விசுவக்குடியில் திமுக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம். பிரபாகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் null

மார்ச் 02, 2021

கடன் தொகையை உடனடியாக வழங்கக்கோரி பெண்கள் முற்றுகை


 



பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. 

இந்த சங்கம் மூலம் அன்னமங்கலம், விசுவக்குடி, முஹம்மது பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள 6 சிறுபான்மை பிரிவை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சூழல் நிதியாக ரூபாய் 44 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கையெழுத்திட்டு கொடுத்தாக கூறப்படுகிறது.

 பிறகு கடன் வழங்குவதற்காக திருச்சியில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் வழங்கியுள்ளனர். ஆனால் அந்த கடன் தொகையை அன்னமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இதுவரை மகளிர் குழுவினருக்கு வழங்கவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த ஏராளமான பெண்கள் சுழல் நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி அன்னமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 இதைத்தொடர்ந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் இந்த வாரத்திற்குள் சுழல் நிதியை சுய உதவி குழு பெண்களுக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நன்றி: தினத்தந்தி நாளிதழ், பப்ளிக் ஆஃப்



பிப்ரவரி 28, 2021

கடன் கொடுக்க ஆணை வழங்கியும், தொகை கொடுக்காமல் அலைகழிப்பு

 


பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சியை சேர்ந்த 6 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதற்கான ஆணையை வழங்கி விட்டு கடன் வழங்காமல் அளிப்பதாகவும், உடனடியாக கடன் தொகையை வழங்க கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் 6 மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி திருச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சரால் உத்தரவிடப்பட்டு கடன் வழங்குவதற்கான ஆணையும் குழுவினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதனை யடுத்து அந்தக் குழுவினர் அன்னமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு சென்ற கடன் தொகையை கேட்டுள்ளனர். அதற்கு வங்கியில் அலுவலர்கள் சரியான விளக்கம் அளிக்காமல் அவர்களை அலைக்கழித்து இதுவரை கடன் தொகையை வழங்கவில்லை. 

இதனால் வேதனை அடைந்த அந்த மகளிர் குழுவினர் உடனே கடன் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

நன்றி: தினகரன் நாளிதழ்



பிப்ரவரி 26, 2021

புதிய தார் சாலை அமைக்கும் பணி. இறை வணக்கத்துடன் ஆரம்பமானது

 


விசுவக்குடி கிராம மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை வெற்றி பெற்றது. விசுவக்குடியிலிருந்து விசுவக்குடி அணை செல்லும் பாதை தார் சாலையாக அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் இறை வணக்கத்துடன் இன்று (26.02.2021) வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. (எல்லா புகழும் இறைவனுக்கே)

விசுவக்குடியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் மாவட்டத்தின் சுற்றுலா தளங்களில் ஒன்றான விசுவக்குடி அணை உள்ளது. 

இந்த அணை செல்லும் சாலையை பயன்படுத்தி தினமும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றது.

இதில் முதல் 2 கிலோ மீட்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மெட்டல் சாலையாக அமைக்கப்பட்டது. 

சாலையில் உள்ள மண் கரைந்து ஜல்லிகற்கள் தனியாக பெயர்ந்து கரடு முரடாக போக்குவரத்திற்கு லாயக்கி அற்றதாக மாறியுள்ளது.

மேலும் வெயில் காலங்களில் புழுதியும், மழை காலங்களில் சேறும் சகதியாக மாறிவிடுகிறது. இதனால் விளை நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொண்டமாந்துறை, அரும்பாவூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், விசுவக்குடி அணை செல்லும் சுற்றுலா வாசிகள் என இந்த சாலையை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வந்தனர். 

எனவே தமிழக அரசு விசுவக்குடியில் இருந்து விசுவக்குடி அணை செல்லும் மெட்டல் சாலையை தார் சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக விசுவக்குடி கிராம மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுப்பி வந்தனர்.

தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, சுமார் 90 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி இன்று மதியம் வெள்ளி கிழமை 12:30 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமானது. இந்த சாலைகான ஒப்பந்தம் சேலம் RK கன்ஸ்ட்ரக்ஸன் பெற்றுள்ளது. இதன் உரிமையாளர் வெற்றிவேல் M.A., M.Ed.,M.Phil., இந்த நிகழ்வில் விசுவக்குடி ஜமாத் நிர்வாகிகள், அத்தக்வா பள்ளிவாசல் இமாம், ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் நேரம் என்பதால் அவசரகதியில் இல்லாமல் தரமாக அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.











பிப்ரவரி 15, 2021

விசுவக்குடியில் நாளை மின்தடை


நாளை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 16) கிருஷ்ணாபுரம் துணைமின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை விசுவக்குடியில் மின் விநியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி அறிவித்துள்ளார். எனவே நமதூர் விசுவக்குடி மக்கள் மின் வசதி தொடர்பான பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ளவும். 

தகவல் அறிவிப்பு: முகமது ஷபீக்

பிப்ரவரி 02, 2021

அரசலூர் ஏரி உடைந்தது போல் ஆபத்து விசுவக்குடி ஏரி விரிசலை உடனே சீரமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர் வேண்டுகோள்

 




பெரம்பலூர்: அரசலூர் ஏரி உடைந்தது போல் உடையும் அபாயத்தில் விசுவக்குடி ஏரி. விரிசலை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பெரம்பலூர்  கலெக்டரிடம் விசுவக்குடி சமூக ஆர்வலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப் பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது விசுவக்குடி கிராமம். இவ்வூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த  சமூக ஆர்வலரான முகமது ஜக்கரியா என்பவர் நேற்று பெரம்பலூர் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

விசுவக்குடி ஊராட்சி பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே ஏரி ஒன்று உள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த ஏரி  நிரம்பி உள்ளது.

இந்த ஏரியை சுற்றியுள்ள விளை நிலங்களுக்கும் கிணறுகளுக்கும் நீராதரமாக இந்த ஏரியாக உள்ளது. தற்போது இந்த ஏரியின் உபரி  நீர் வெளியேற்றப்படும் கடகால் எனப்படும் கான்கிரீட் கட்டுமானத்தில் மிகப்பெரிய விரிசல் காணப்படுகிறது. ஒன்றரை மீட்டர் நீளமுள்ள இந்த விரிசல்  அதன் கட்டுமானத்திற்கு ஆபத்தை ஏற்படுத் தும் விதமாகவே உள்ளது.இதன் காரணமாக அரசலூர் ஏரி உடைந்து 170 ஏக்கர் விலை நிலங்கள் நாசமானது போல இப்பகுதியிலும் அசம்பாவிதம் ஏதும் நேராமல், முன்கூட்டியே  திட் டமிட்டு மக்களையும் விளை நிலங்களையும் காப்பாற்றத் துரித நடவடிக்கை எடுத்து பொதுப்பணித்துறை மூலம் விரிசலை சரி செய்து, ஏரி நீரை  பாதுகாக்க விரைந்து உத்தரவு இட வேண்டும் என விசுவக்குடி கிராம பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

https://www.facebook.com/107459262625549/posts/3918641804840590/

https://www.google.com/amp/s/m.dinakaran.com/article/News_Detail/651599/amp







பிப்ரவரி 01, 2021

அரசலூர் ஏரி உடைப்பு எதிரொலி. அதிகாரிகள் இடமாற்றம்?



பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா தாசில்தாராக இருந்த கிருஷ்ணராஜ் குன்னம் தாலுக்கா விற்கு இடமாற்றம். ஆலத்தூர் தாலுக்காவில் இருந்த  பாலசுப்பிரமணியம் என்பவர் வேப்பந்தட்டை தாலுக்காவின் புதிய தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) இமயவர்மனும் இடமாற்றம். அதற்கு பதிலாக முரளி என்பவர் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.