செப்டம்பர் 09, 2020

விசுவக்குடி திமுக கிளை செயலாளர் மறைவு

விசுவக்குடி திமுக கிளை செயலாளராக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருபவர் பாஜி எனும் சி.அமீனுதீன். 60 வயதை கடந்த இவர் விசுவக்குடி பேருந்து நிறுத்தம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார்.

இன்று புதன்கிழமை மாலை சுமார் 6:30 மணியளவில் உடல் நலக்குறைவு காரணமாக அவரது வீட்டில் இயற்கை எய்தினார். 

இவரது உடல் நாளை ( 10 செப்டம்பர் 2020 ) வியாழக்கிழமை மதியம் விசுவக்குடி அடக்கத்தளத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள் 😢

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்