டிசம்பர் 13, 2011

விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்தை வெல்ல மக்கள் செய்ய வேண்டியது என்ன?

பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்திட்டம் தொடர்ந்து புறந்தள்ளப்பட்டு வருகின்றது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்த பகுதியின் வறட்சியை போக்குவதற்காக 1942 ஆம் ஆண்டே ஆலோசிக்கப்பட்ட திட்டம் தான் விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம். நிலத்தடி நீர் மூலம் விவசாயம் நடைபெறும் இந்த பகுதியில் போதிய நீர்ஆதாரம் இல்லாததால் விளைநிலங்கள் அனைத்தும் தரிசாக மாறிவருவதால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள்

நவம்பர் 26, 2011

விசுவக்குடியில்  பண்பு ஒழுக்க பயிற்சி முகாம்
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இளம் போராளிகள் எனப்படும் மாணவரணி சார்பில்  தர்பியா எனும் பண்பு ஒழுக்க பயிற்சி முகாம் கடந்த 13.11.2011 ஞாயிறு அன்று விசுவக்குடி பெண்கள் நிஸ்வானில் நடைப்பெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் குதரத்துல்லா தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாநில துணை பொதுச் செயலாளர் ரிஃபாயி அவர்கள் தலைமை பண்பு என்கிற தலைப்பில உரையாற்றினார்.
 
 மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொது செயாலளர் அப்துல் சமது அவர்கள் சமுதாய சிந்தனை என்கிற தலைப்பில் உரையாற்றினார். தமுமுகவின் மாநில உலமாக்கள் அணி செயலாளர் காரைக்கால் யூசுப் எஸ்.பி

நவம்பர் 13, 2011

"விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டம் 2012-ல் தொடங்கும்'

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டப் பணிகள் 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்றார் பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன்.


  அன்னமங்கலம் கிராமத்தில், விசுவக்குடி - கல்லாறு பகுதியில் ரூ. 19 கோடியில் நீர்த்தேக்கத் திட்ட கட்டுமானப் பணிகள் தொடங்குவது தொடர்பாக, பொதுப்பணித் துறை அலுவலர்கள் கணேசன் மாரிச்சாமி, தமிழரசன்

அக்டோபர் 12, 2011

விசுவக்குடி செயற்கைக்கோள் புகைப்படங்கள்!
படத்தை பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும்

விசுவக்குடியை செயற்கைக்கோளில் 
இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். 
டாப் வியூவில் 200 அடி உயரத்தில் 
இருந்து எடுக்கப்பட்டது.

ஜூலை 29, 2011

விசுவக்குடியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
  பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி கிராமத் தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(28). இவரது மனைவி லட்சுமி(25). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

 இவர்களது மகன் விஷாந்த் (6), ஸ்ரீவித்யா(4). விஷாந்த் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பும், ஸ்ரீவித்யா எல்கேஜியும் படித்து வந்தனர். கிருஷ்ணமூர்த்தி தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள பழ மண்டியில் வேலை செய்து வருகிறார்.