பாலூர் ஊரின் அறிவிப்பு பலகையை கண்டவுடன் எனது இறுக்கையை விட்டு எழுந்து படிக்கட்டுக்கு அருகில் சென்றேன்.
பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் கம்பியில் சாய்ந்து நின்று கொண்டிருந்த நடத்துனர் என்னைப பார்த்து தனது புருவங்களை மேலே உயர்த்தி விழிகளை மட்டும் பேருந்துக்கு வெளியே நகர்த்தி தலையை லேசாக ஆட்டினார்.இங்கே இறங்கப் போகிறீர்களா என்று அர்த்தமாம்.
நானும் தலையை மேலிருந்து கீழாக ஒருமுறை ஆட்டினேன். சினேகப் புன்னகையுடன் விசிலை வாயில் வைத்து ஊதிவிட்டு
'பாலூர் ஆலமரம் எல்லாம் இறங்குங்க'
பேருந்து முழுவதையும் பார்வையில் அளந்தவாரே குரல் கொடுத்தார் நடத்துனர்.

என்னை தவிர அங்கு யாரும் இறங்கவில்லை. சுமையை குறைத்துவிட்டு திருப்தியில் பேருந்து என்னை கடந்து சென்றது. இறங்கியதும் நோட்டமிட்டேன். அங்கே இருந்த ஆலமரம் எப்படியும் இரண்டு நூற்றாண்டையாவது கடந்து இருக்க வேண்டும். தனது விழுதுகளை பரப்பி விசாலமாய் பரந்து விரிந்திருந்தது. பேருந்தே மரத்தின் உள் புகுந்து வெளியேருவதாகத்தான் எனக்குப்பட்டது.
ஆலமரத்தின் கீழே ஒரு நடுகல். கொஞ்சம் தள்ளி கீற்றுக் கொட்டகையினால் ஆன தேனீர் கடை. நெளிந்த தகரத்தில் சடையன் டீ கடை என்றுபழங்கால கல்வெட்டுக்களில் செதுக்கி வைத்திருக்கும் ஸ்டைலில் எழுதப்பட்டிருந்தது. கடைக்கு வெளியில் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்த பெரியவரிடம்.
'அய்யா இந்த ஊர் எலிமின்டரி ஸ்கூலுக்கு எப்படி போகனும்' கேட்டேன்.
அவர் பெஞ்சிலிருந்து எழுந்து தனது கைத்தடியை ஊன்றியவராக நடந்து என் அருகில் வந்து எனது புஜத்திற்கு அருகில் எனது உயரத்திற்கு ஏற்றவாறு சற்றே குனிந்து தனது இடது கையை நீட்டி
'இப்படியே நேரா போனீங்கன்னா இந்த ரோடு சோத்துக்கை பக்கம் திரும்பும். திரும்பியதும் ஒரு களம் வரும் அதைத்தாண்டி போனீங்கன்னா கொளவாரிகள் சத்தம் கேட்கும். அங்கதான் ஸ்கூல். பக்கம்தான்'
அவர் எடுத்த வகுப்பு எனக்கு புரிந்ததா என்னை ஊடுருவிப் பார்த்தார். புரிந்ததன் அடையாளமாய் தலையை ஆட்டினேன்.
அவரின் நாட்டார் வழக்காரியல் சொற்கள் எனக்கு பிடித்திருந்தன. புன்னகையை பரிசாகத் தந்தேன்.
திருப்தி அடைந்தவராய் மீண்டும் அதே மரபெஞ்சில் போய் அமர்ந்துக் கொண்டார் அந்த பெரியவர். என்னைப் பற்றிய எந்த விசாரணையும் செய்யாமல் வழிகாட்டியது எனக்கு ஆச்சர்யமாய் இருந்ததது.
அவர் காட்டிய திசையில் நடையை கட்டினேன். இயற்கை இந்த ஊருக்கு நிறையவே வழங்கி இருக்கிறது. திரும்பிய இடமெல்லாம் பசுமை நிறைந்திருந்தது. ஒவ்வொரு வீடுகளுக்கு முன்பும் பின்பும் குறைந்தபட்சம் ஏதோ ஒரு மரமாவது நின்று கொண்டிருந்தது. விவசாயமும் செழிப்பாக இருந்ததை பேருந்தில் வந்த போதே பார்த்தது நினைவுக்கு வந்தது.
தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாத்துறேன்னு சொல்லிட்டு நல்ல செழிப்பான பகுதிக்கு என்னை அனுப்பி இருக்கிறார்கள் என்று பெருமை கொண்டேன்.
ஆளும்கட்சிக்கு சொந்தமான ஆசிரியை ஒருவருக்கு பணி இடமாறுதல் தொடர்பாக நேர்மையாக செயல்பட்டதால் எனக்கு பல மாவட்டங்கள் கடந்து இந்த ஒன்றியத்திற்கு உதவி தொடக்கல்வி அதிகாரியாக பணி மாறுதல் பெற்று வந்திருக்கின்றேன். நேர்மைக்கு என்றைக்குமே பரிசுகள் இப்படித்தான் இருக்கும் என என் உயரதிகாரிகள் நிறைய அனுபவப்பாடம் எடுத்து இருக்கின்றனர்.
நான் இந்த ஒன்றியத்தில் பொறுப்பேற்றதில் முதல் விசிட் இந்த ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்குத்தான்.
அந்தப் பெரியவர் காட்டிய திசையில் பயணித்து வலதுபுறம் திரும்பியதும் நெற்கலத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்து வைக்கோல்கட்டுகள், நெல் மூட்டைகள் யாருடைய காவலும் இன்றி தனியாக கிடந்தது. கொஞ்சம் அருகில் சிலர் மாட்டிற்கு லாடம் கட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை கடந்தவுடன் அரசுக் கட்டிடம் என்பதனை உறுதி செய்யும் விதமாக சுண்ணாம்பில் காவி கலந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது பள்ளியின் காம்பவுண்ட் சுவருக்கு.
பள்ளியின் நுழைவு வாயிலில் எப்போதோ இரும்பினால் வளைக்கப்பட்ட கம்பிகளில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி பாலூர் எழுத்துக்கள் வண்ணங்கள் தோய்ந்து காணப்பட்டன.
முன் காம்பவுண்ட் சுவரில் ஒருமாணவனும், ஒரு மாணவியும் காகித பென்சிலில் அமர்ந்து கையை நீட்டிக் கொண்டு இருப்பது போலவும் கீழே அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற அறிவிப்பு பாதிசுவரை ஆக்கிரமித்து இருந்தது. மீதி இடங்களில் திட்டக்குறிக்கோள்கள் கருஊதா வண்ணம் பூசப்பட்டு வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தன. சுற்றுச் சுவர்களில் திருக்குறளும் எழுதப்பட்டிருந்தது.
பள்ளியின் உள்ளே நுழைந்தேன். கட்டிடங்கள் ப வடிவமாக அமைந்திருந்தது. கட்டிடங்களுக்கு நடுவே குருகலாக உள்ள பகுதிதான் விளையாட்டு மைதானமாக இருக்க வேண்டும். மைதானத்தின் மேற்கு திசையில் இரும்பினால் ஆன கொடிக்கம்பம் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
வளாகத்தின் உள்ளே சென்றேன். கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கி அமைந்திருந்த வகுப்பறைகளை கவனித்தவாறே நடந்தேன். ஆஸ்பெஸ்டாஸ் கூறையிட்ட அந்த வகுப்பறையில் உள்ளே குழுகுழுவாக வட்டமாய் சிறுவர்கள் அமர்ந்திருந்தனர்.
அவர்களின் உருவத்தை வைத்து பார்க்கும் போது அவர்கள் ஒன்றாவது, இரண்டாவது படிக்கும் மாணவர்களாக இருக்கக்கூடும் எனக்கணக்கிட்டேன்.
அதற்கு நேர் எதிரே உள்ள கட்டிடத்தில் உள்ளே நுழைந்தேன்.
அந்த வகுப்பறை முழுவதும் ஆசிரியரும், மாணவரும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. மாணவர்கள் இருந்ததற்கு அடையாளமாய் அவர்களின் புத்தகப்பைகள் மட்டும் வரிசையாக கிடந்தது.
அதே கட்டிடத்தின் மீதிப்பாதியில் இருந்த வகுப்பறையில் கரும்பலகையில் ஆசிரியை ஏதோ எழுதிக் கொண்டிருக்க மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். நான் வந்திருப்பதை கவனித்த அந்த ஆசிரியை இருகரத்தை குவித்து வணக்கம் செலுத்தி
'வாங்க சார். என்ன வேனும் உங்களுக்கு'
'நான் புதிதாக வந்திருக்கும் A.E.O ஹெட்மாஸ்டர் நீங்களா'
சற்றே பதறியவராக அந்தப் பெண்மணி.
'வாங்க சார் உட்காருங்க'
காலியாக இருந்த வகுப்பறையின் நாற்காலியை காண்பித்தார். ஆந்த அறையின் கரும்பலகையில் ஐந்தாம் வகுப்பு, வருகை பதிவு என்பவை குறிப்பிடப்பட்டிருந்தது. அறையில் சுவருக்கு அருகில் வரிசையாக சிறிய பெரிய அளவிலான பீரோக்கள், புதிதாக வழங்கப்பட்ட மூன்று கம்ப்யூட்டர், TV பெட்டிக்கள் இருந்தது. இதுதான் தலைமை ஆசரிரியரின் அறை என்பதனை உணர்த்தியது.
'ஹெட்மாஸ்டர் நீங்களான்னு கேட்டேன்'
'இல்லை சார் அவர் பசங்களோட பின்னாடி தோட்டத்தில் இருக்கார்'
'நான் போய் கூட்டிட்டு வந்திடுறேன் சார்'
'இல்லை பரவாயில்லை. நானே அங்கே போய் பார்த்துக்கிறேன்'
'தோட்டம் எங்கே'
'அந்த வடக்கு பார்த்த கட்டிடத்துக்கு பின்னாடி சார்'
'சரி நீங்க கிளாஸ்க்கு போங்க'
தயங்கி தயங்கி சென்றவரை சட்டை செய்யாமல் தோட்டம் நோக்கி நடந்தேன்.
வடக்கு பார்த்த கட்டிடத்தின் உள்ளே நுழைந்ததும் அங்கே வகுப்பறையில் குழு குழுவாக மாணவர்கள். ஒரு குழுவின் நடுவில் ஒரு ஆசிரியர் நான் கடப்பது கூட தெரியாமல் கடமையே கண்ணாக மாணவர்களிடையே உறையாடிக் கொண்டிருந்தார்.
ஏ.பி.எல் கல்விமுறை மாணவர், ஆசிரியர் உறவை எப்படி புரட்டிபோட்டிருக்கிறது. பெருமிதத்தோடு வகுப்பை கடந்த உடன் தோட்டம் தென்பட்டது.
தோட்டத்தில் அரசு வழங்கிய இலவச சீருடையை அணிந்த மாணவ, மாணவிகள் குழுமி இருந்தனர்.
'சரவணனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பாதாம் மரக்கன்றை தனது கரங்களால் நட்டு வைக்கிறார்'
'வா சரவணா இந்த கன்றை குழிக்குள் வை' மிகுந்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் அந்த மாணவன் ஆசிரியரிடமிருந்து மரக்கன்றை வாங்கி குழிக்குள் வைக்க. சுற்றி குழுமி இருந்த மாணவர்கள் கைத்தட்டினர். மாணவர்களோடு சேர்ந்து அந்த ஆசிரியரும் கைத்தட்டினர்.
அதனைப் பார்க்க பேரானந்தமாய் இருந்தது எனக்கு ஒரு அரசுப்பள்ளியில் மாணவர்கள் மீது அவ்வளவு நெருங்கி அவர்கள் மீது அக்கறையுடனும் ஆசிரியர் இருப்பது எல்லா பள்ளிகளுக்கும் முன் மாதிரியாக இருப்பதாகப்பட்டது.
குழியை மணலால் மூடப்பட்டு குடத்தில் உள்ள தண்ணீரை அந்த மாணவனே ஊற்றி நிறைவு செய்தான். அந்த தோட்டத்தில் ஏற்கனவே சிறிதும் பெரிதுமாக நிறைய மரக்கன்றுகள் நடப்பட்டிருந்தன.
'இந்த மரக்கன்றுக்கு தினமும் நீதான் தண்ணீ ஊத்தனும்'
அந்த மாணவனும் அவரது கோரிக்கையை ஆமோதித்தான். வேலைகளை முடித்த திருப்தியில் ஏதேச்சையாய் என்னைப் பார்த்தார். எந்தவிதப் பதற்றமும் அடையாமல்.
'வணக்கம் சார்'
'எல்லோரும் அய்யாவுக்கு வணக்கம் சொல்லுங்க'
'வணக்கம் அய்யா'
மாணவர்கள் அனைவரும் ராகமாய் கூச்சலிட்டனர்.
'எல்லாரும் கிளாஸூக்கு போலாமா'
தோட்டத்திலிருந்து மாணவர்கள் யாருடைய நெறிப்படுத்தலுக்கும் ஆளாகாமல் வகுப்பறைக்குச் சென்று அமைதியாய் அவரவர் இடத்தில் அமர்ந்தனர்.
நானும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.
'மாஸ்டர் அட்டனன்ஸ் எடுங்க'
மேசைமேல் இருந்த காக்கி அட்டை போட்ட நீளமான நோட் என் முன் தலைமை ஆசிரியரால் வைக்கப்பட்டது. புரட்டினேன்.
அப்துல் ரஹீம் தலைமை ஆசிரியர். பெயரை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். வேள்ளை வேட்டி. வெள்ளையில் கரு ஊதா நிறத்தில் கோடு போட்ட அரைக்கை சட்டை. முன் தலையில் முடிகொட்டி லேசான வழுக்கையோடு ஐம்பது வயது மதிக்கத்தக்கவராய் தெரிந்தார்.
'நான்கு ஆசிரியர்கள் மட்டும்தானா'
'ஆமாம் சார் போன வருஷம் வரைக்கும் ஐந்து பேர் இருந்தோம். ஸ்டெரென்த் குறைஞ்சு போனதால இப்போ நாலு பேர்தான்'
'என்ன ஸ்டெரென்த்'
'நூற்று முப்பத்து இரண்டு'
'முன்ன எவ்வளவு இருந்தச்சு'
'இருநூற்று நான்கு'
'எப்படி இவ்வளவு குறைஞ்சது'
'இந்த ஊர்ல மெட்ரிகுலேஷன் ஸ்கூல் புதுசா ஆரம்பிச்சிருக்காங்க. ஆங்கில மோகம். எல்லாம் போயிட்டாங்க'.
'இருக்கிற ஸ்டெரென்த் குறையாம பார்த்துக்குங்க'
'ட்ராபௌட் இருக்கா'
'இல்லை சார்'
மற்ற பதிவேடுகளையும் புரட்டினேன். அனைத்தும் சரியாகவே பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.
'க்ளாஸ் ரூம்களுக்கு போலாமா ரஹீம் சார்'
'போலாம் சார்'
வகுப்பறைகள் அனைத்தும் தூய்மையாக இருந்தன. எல்லா வகுப்புகளிலும் மாணவர்களின் வருகை குறைவில்லாமல் இருந்தது. வருகை சரியாக இருந்தாலே மாணவர், ஆசிரியர் உறவு சீராக இருப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்பவன் நான். இந்த ஒன்றியத்தின் முதல் கள ஆய்வே திருப்தியாக இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
எல்லா வகுப்புகளையும் சுற்றியப்பின் ரஹீம் சார் வகுப்பில் அதாவது தலைமை ஆசிரியர் வகுப்பில் அமர்ந்தேன். அந்த வகுப்பு மாணவர்களும் சில கேள்விகளை வீச சட்டென்று பதில் வந்து விழுந்து கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் வாசல் பகுதியில் ஒரு மொட்டைத்தலை ஆசாமி வணக்கம் வைத்தார்.
'வணக்கம் என்ன வேண்டும்'
ஆசாமிக்கு அருகில் சென்றார் ரஹீம் சார்.
நான் மாணவர்களிடம் வினாக்களை தொடுத்துக்கொண்டே இருந்தேன். அவர்களுக்கு கிசு கிசுப்புடன் சன்னமாக உரையாடிக் கொண்டிருந்தனர். அந்த ஆசாமி தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையில் எதையோ ரஹீம் ஆசிரியரிடம் வழங்க. அதனை வாங்கிப் பார்த்துவிட்டு திரும்பியும் ஆசாமியிடமே வழங்க சில வினாடிகள் உரையாடலுக்குப்பின் அந்த மஞ்சல் பை ரஹீம் ஆசிரியரிடமே கைமாறியது. அந்த மொட்டைத்தலை ஆசாமி வாய் நிறைய புன்னகையோடு விடைபெற்றார்.
ரஹீம் ஆசிரியரும் புன்னகையோடு விடை கொடுத்தனுப்பினார்.
வலது கையில் மஞ்சல் பையோடு வகுப்பறைக்கு நுழைந்தவர் அந்த பையை அலமாரியில் வைத்தார். பார்வையால் நான் கேட்ட கேள்விக்கு
'மாங்காய் கொடுத்துட்டு போறார் சார்' என்றார் .
இதுவரை அந்த பள்ளியின் மீதும் அவர் மீதும் வைத்திருந்த பிம்பம் தகர்ந்து போனது. லஞ்சம் புழங்காத இடம் கல்வி கூடம் மட்டும்தான். இங்கேயும் மாணவர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமோ இப்படி காய்கள், பழங்கள், தானியங்களாக பெற்று கொள்வதும் லஞ்சம்தானே.
ச்சே. என்ன மனிதர் இவர். முன்மாதிரி இளைய சழுதாயத்தை உருவாக்க வேண்டியவர்களே முறைதவறி நடப்பதா? சிந்திக்க சிந்திக்க. எனக்கு இரத்த அழுத்தம் அதிகமாவதாகப்பட்டது. இதற்கு மேல் அங்கிருந்தால் என்னை அறியாமல் ஏதாவது செய்யதுவிடுவேன். சுதாரித்தவனாக கோப்புகளில் கையெழுத்தைப் போட்டுவிட்டு.
'சரி கிளம்பறேன். பஸ் எப்போ'
'சார் மதியம் சாப்பிட்டுவிட்டு போலேமே சார்'
கோபம் உச்சத்துக்கு ஏறியது. சாப்பாடும் எனக்கு வழங்கப்படும் லஞ்சம்தானே என்று எண்ணியவனாக.
'எத்தனை மணிக்கு பஸ்ஸுன்று கேட்டேன்'
கடுப்பாக. திரும்பி சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தை பார்த்துவிட்டு.
'இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துவிடும் சார்'
என்றார் முகத்தில் எந்த சலனத்தையும் வெளிக்காட்டாமல்.
அடுத்த விசிட்டில் வச்சுக்கிறேன் கச்சேரி என்று மனதில் எண்ணியவனாக ரஹீம் ஆசிரியரின் முகத்தைப் பார்க்க பிடிக்காமல் பள்ளிக்கூடத்தை விட்டு விரைவாக வெளியேறினேன். ஊரின் அழகை ரசித்துக்கொண்டு அமைதியான மனநிலையோடு உள்ளே நுழைந்த நான் இப்போது உணர்ச்சி கொந்தளிப்போடு பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன்.
லேசாக தலை வலித்தது. அங்கிருந்த தேனீர் கடைக்காரரிடம்
'சூடாக ஒரு டீ போடுங்க'
'பஸ் வர நேரமிருக்கில்ல'
'இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்குங்க. அதுக்குள்ள டீ சாப்பிட்டுடலாம்' வெளியில் கிடந்த மரபெஞ்சில் அமர்ந்தேன்.
என்னை அசுவாசப் படுத்திக்கொள்ள கர்சிப்பால் முகத்தை துடைத்துக்கொண்டேன். அந்த ஆலமரத்தின் கிழே நடுகல்லில் சாய்ந்தவாறு ரஹீம் ஆசிரியருக்கு மாங்காய்கள் தந்த மொட்டை ஆசாமி நின்று கொண்டிருந்தார்.
கையை அசைத்து சைகையால் அவரை அழைத்தேன். எனது அழைப்பை கவனித்த அந்த ஆசாமி தனது இடுப்பில் மடித்து சொருகி இருந்த கைலியை கிழே இறக்கி விட்டுவிட்டு என்னை நோக்கி வந்தார். எனது அருகில் வர நான்கடி தூரங்களுக்கு முன்னால் வலது கையால் வணக்கம் வைத்தார்.
'வணக்கம்'
இதற்கிடையில் கடைகாரரின் டீ டம்ளர் என் கைக்கு மாறியது.
'நீங்க யார். ஏன் ரஹீம் சாரை பார்க்க வந்திங்க'
'சார் நான் தேனூர்காரன். ரஹும் சார் இதுக்கு முன்னாடி எங்க ஊர்லதான் வேலைபார்த்தார். அதான் அவரை பார்த்திட்டு போலாம்னு வந்தேன்'
'வந்திங்க சரி. ஏன் மாங்காய்கள்ளாம் கொடுத்தீங்க. ரொம்ப நாட்போ'
எனது பேச்சின் ஏளனத்தை உணர்ந்த அந்த ஆசாமி சற்றே குரலை உயர்த்தி பேசினார்.
'சார். ரஹீம் சார் எங்க ஊர்ல வேலைபார்த்த போது அவரை எல்லார்க்கும் பிடிக்கும். அன்பாப் பழகுவார். அது மட்டுமில்லை என் மவன் பிறவியிலேயே திக்குவாய். அவனையும் நல்லா தயார் பண்ணி ஸ்கூல் முதல் மார்க் வாங்க வச்சவரு'.
'இன்னைக்கு அவன் ஹைஸ்கூல்ல ப்ளஸ்டூ படிக்கிறான். அவன்தான் ஸ்கூல் ஃபஸ்ட். அஞ்சாம் வகுப்புல முதல் மார்க் வாங்கினத பாராட்டி ரஹீம் சார் என் பையனுக்கு ஒரு மாமரக்கன்று பரிசா கொடுத்தார். அதை என் வீட்டு தோட்டத்தில் நட்டுவச்சான்'.
'அது இப்பதான் காய்காய்க்க ஆரம்பிச்சது. முதல்ல காய்ச்ச காயை குரு காணிக்கையாக அவருக்கே குடுக்கனும்னு அவன் ஆசப்பட்டான். அவனுக்கு இன்னிக்கு ஸ்கூல் இருந்ததால நானே வந்து என் மவன் ஆசைய நிறைவேத்திட்டு போறேன்'
'அவர் வாங்க மறுத்தார். நான்தான் நீங்க வாங்கலன்னா என் மவன் சாப்பிடகூட மாட்டான். தயவு செஞ்சு வாங்கிக்குங்கன்னு கட்டாயப்படுத்தி குடுத்துட்டு வந்தேன்'
'அவரை போய் ரொம்ப ஏளனமாக பேசுறீங்க'
என் தவறை உணர்ந்த நான் தலைகுனிந்தேன்.
'சார் பஸ் வருது'
டீ கடைகாரின் குரல். கையில் இருந்த டீ கிளாசையும் அதற்கான தொகையையும் விரைவாக கடைகாரரிடம் கொடுத்துவிட்டு பேருந்தைநோக்கி ஓடினேன்.
நானும் அந்த மொட்டைத்தலை ஆசாமியும் அதே பேருந்தில் ஏறினோம். இருவரும் அருகருகில் அமர்ந்திருந்தாலும் என்னால் பேச இயலவில்லை.
இப்போது என் மனதில் ரஹீம் சார் மீண்டும் உன்னத மனிதராய் உயர்ந்து நின்றார்.
நான் முடிவெடுத்தேன் இந்த வருடத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு நான் பரிந்துறைக்கப்போகும் ஆசிரியர் ரஹீம் சார்தான்.
பெரம்பலூர் மாவட்டம்.
தொடர்புக்கு: 9842491363

இ.தாஹிர் பாஷா
அரசினர் மகளிர் விடுதி எதிர்புறம்
காந்தி நகர்
அரும்பாவூர் - 621 103பெரம்பலூர் மாவட்டம்.
தொடர்புக்கு: 9842491363
இவரின் மற்ற படைப்புகள்: