டிசம்பர் 16, 2010

விசுவக்குடி புதிய சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டும் விழா புகைப்படக்காட்சி
விசுவக்குடியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக டிசம்பர் 15 2010அன்று  புதிய சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.


விசுவக்குடியில் நேருயுவகேந்திரவின் திறப்பு விழா

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் ஊராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியான விசுவக்குடி பகுதியில் நல்வழி இளைஞர்கள் நற்பணி மன்றம் என்ற பெயரில் இந்திய அரசின் இளைஞர்நலம் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திர அமைப்பின் திறப்பு விழா 10.12.2010 வெள்ளி அன்று நடைப்பெற்றது.

பள்ளிவாசல் அருகில் உள்ள பெண்கள் மதரஸாவில் நடைப்பெற்ற இவ்விழாவை பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நேரு யுவ கேந்திர

நவம்பர் 28, 2010

விசுவக்குடி பகுதிக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்  மக்கள் வலியுறுத்தல்
படங்கள், செய்திகள் : தௌ.மு.ஜகரிய்யா
       பெரம்பலூர் பிள்ளையார் பாளையத்துக்கு விசுவக்குடி வழிதடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் பகுதிகளில் சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் தினமும் ஒரு அரசு பேருந்து மட்டுமே கடந்த 28 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வீட்டு தேவைக்கும், விவசாய விளைப்பொருட்களுக்கும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவ சுகாதார வசதிகளை பெற மற்றும் பலர்

நவம்பர் 11, 2010

விசுவக்குடி  ஏரி நிரம்பியது
விசுவக்குடியில் தொடர் மழை பெய்ததால் ஏரிநிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வடகிழக்கு பருவமழை, தொடர்மழை காரணமாக விசுவக்குடி ஏரி 100 சதவீதம் நிரம்பியது.
விசுவக்குடியில் பகுதியில் ஏரி நிறைந்து  
கலிங்கில் நீர் வழியும் காட்சி
    தொடர்மழையால் பச்சைமலையில் உற்பத்தியாகி வரும் கல்லாற்றிலும் தண்ணீர் அதன் இருகரைகளையும் தொட்டுச் செல்கிறது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இடியுடன் பெய்த கனமழையில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லாற்றில் இருகரைகளையும் 
தொட்டு செல்லும் நீர்

அக்டோபர் 29, 2010

விசுவக்குடியில் தமுமுக சட்ட விழிப்புணர்வு கூட்டம்


பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று (29.12.2010) நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் பிரிவான இளம் போராளிகள் பாசறையினர் சார்பாக விசுவக்குடி பள்ளிவாசல் அருகில் உள்ள பெண்கள் நிஸ்வானில் மாவட்ட துணை செயலாளர் வதூத் தலைமையில் நடைப்பபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக விசுவக்குடி பள்ளியின் இமாம் மௌலான மௌலவி முஹம்மது சுலைமான் ரஹ்மானி அவர்கள் இறைமறை ஓதி நிகழ்ச்சியை துவக்கினார். விசுவக்குடி கிளையின் செயலாளர் முஹம்மது யாசீன் வரவேற்றார். 

மனிதநேய மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சுல்தான்மொய்தீன், விசுவக்குடி பள்ளிவாசல் நிர்வாகக் குழுவின் செயலாளர் முஸ்தபா, பொருளாளர் அமானுல்லா, ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீது ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் தாஹிர்பாஷா கருத்துரை வழங்கினார். பின்னர் போதி கற்கை மையத்தின் தோழர் பா.பிரபாகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். 

இந்த நிகழ்ச்சியில் அரும்பாவூர், பெரம்பலூர், முஹம்மது பட்டினம், லப்பைகுடிக்காடு பகுதிகளில் உள்ள பல இளைஞர்கள் கலந்துக் கொண்டனர். 

மேலும் தமுமுக மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது இலியாஸ், மாவட்ட பொருளாளர் இலியாஸ்அலி, மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜஹாங்கீர் பாஷா போன்ற முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியை மனிதநேய மக்களி கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தௌ.மு.ஜகரிய்யா தொகுத்து வழங்கினார்.

இறுதியாக மனிதநேய மக்கள் கட்சியின் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சபியுல்லா அவர்கள் நன்றி கூறினார்.

செப்டம்பர் 21, 2010

இசுலாமியர்களின் பயன்பாட்டிற்கு மண்டபம் அமைகிறது    ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!
விசுவக்குடியில் புதிய பள்ளிவாசல் கட்டும் பணியை நோக்கமாக கொண்டு வேலை செய்யும் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் பொதுக்குழு 18.09.2010 சனிகிழமை அன்று இரவு விசுவக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் நடைப்பெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வை பள்ளியின் இமாம் மௌலான சுலைமான் ரஹ்மானி அவர்கள் இறைமறை ஓதி துவங்கி வைத்தார். நிர்வாக கமிட்டியின் செயற்க்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகக்குழுவில் மாற்றம்   புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடு
 புதிய பள்ளிவாசல் கட்டுதல், கிராம முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்  போன்ற குறிப்பிட்ட பணியை நோக்கமாக கொண்டு வேலை செய்யும் நிர்வாகக்குழு கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி விசுவக்குடியில் ஏற்படுத்தப்பட்டது. அனைத்து செயல்களையும் ஜமாத்தும் நிர்வாகக் குழுவும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது ஒரு மாதமே ஆன நிலையில் நிர்வாகக்குழு நிர்வாகிகளை மாற்றம் செய்யதுள்ளது.

ஆகஸ்ட் 20, 2010

விசுக்குடியில் எரிவாயு இணைப்பு வழங்கும் விழா
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சி விசுவக்குடியில் 17ம் தேதி தமிழக அரசின் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

 மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) பழனிசாமி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கினார். இதில் வேப்பந்தட்டை வட்ட தாசில்தார், ஒன்றிய செயலாளர் மகாதேவி ஜெயபால், கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர்கள்  மற்றும் விசுவக்குடியில் உள்ள மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

 இதில்  ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் வரவேற்றார். வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் நன்றி கூறினார்.

ஆகஸ்ட் 14, 2010

விசுவக்குடி - புதிய நிர்வாகிகள் தேர்வு
A.Aamanulla
      பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி பள்ளிவாசலில்  ஜமாத் சார்பில் 10.08.2010 அன்று பள்ளிவாசல் நிர்வாக பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காதர்அலி, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

புதிய பள்ளிவாசல் கட்டுதல், கிராம முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற குறிப்பிட்ட பணியை நோக்கமாக கொண்டு வேலை செய்யும் புதிய நிர்வாககுழு ஏற்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டது. பின்னர் தேர்தல் நடைப்பெற்றது. அதில்