டிசம்பர் 19, 2020

விசுவக்குடி அணை திறப்பு. முழுநிகழ்வு காட்சிகள்


 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்காவில் விசுவக்குடி அணை உள்ளது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக 33 அடி கொள்ளளவு கொண்ட அணை நிரம்பியது. 

இன்று டிசம்பர் 19 பெரம்பலூர் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர்களான ரா. தமிழ் செல்வன் மற்றும் குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா முன்னிலையில் அணையை திறப்பதற்காக நிகழ்வில் கலந்து கொண்டு அணை நீரை திறந்து வைத்தனர்.
கல்லாற்று நீரை பகிர்ந்து கொள்வதில் இரு கிராமங்கள் இடையே முறுகல் நிலை

 


கல்லாற்று நீரை பகிர்ந்து கொள்வதில் விசுவக்குடி மற்றும் வெங்கலம் கிராம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

இரு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலெக்டரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்காவில் விசுவக்குடி அணை உள்ளது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக 33 அடி கொள்ளளவு கொண்ட அணை நிரம்பியது. 

இன்று டிசம்பர் 19 பெரம்பலூர் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர்களான ரா. தமிழ் செல்வன் மற்றும் குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா முன்னிலையில் அணையை திறப்பதற்காக நிகழ்விற்கு வந்திருந்தனர்.

அப்போது அங்கிருந்த அன்னமங்கலம் கிராம மக்கள் தங்கள் ஊர் ஏரிக்கும் அணையில் இருந்து தண்ணீர் வேண்டும் என கூறி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



டிசம்பர் 18, 2020

நாளை விசுவக்குடி அணை திறக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு


பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி அணையிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக  மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பா ஸ்ரீ வெங்கட பிரியா.இ.ஆ.ப. அவர்களால் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர் டி ராமச்சந்திரன் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு இரா தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலையில் நாளை (19.12.20) காலை 10:45 அளவில் தண்ணீர் திறந்து வைக்கப்படவுள்ளது.

V POST

டிசம்பர் 17, 2020

விசுவக்குடி அணையில் நீர் திறப்பு எப்போது?


பெரம்பலூர் பொதுப்பணித்துறை SDO (SUB DIVISION OFFICER) பிரபாகரன் விசுவக்குடி அணைக்கட்டை தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விசுவக்குடி அணை நீர் பயன்பாட்டிற்கு எப்போது திறக்கப்படும் என கேட்டதற்கு,

நேற்று இரவு முதல் பச்சை மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விசுவக்குடி அணைக்கு கல்லாற்றிலிருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

33 அடி கொள்ளளவு கொண்ட விசுவக்குடி அணையின் நீர்மட்டம் தற்போது 29 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவான 33 அடியை எட்டிய பிறகே அணை திறக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது AE நல்லுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குதரத்துல்லா, 2-வது வார்டு உறுப்பினர் வதூத் ஆகியோர் உடனிருந்தனர்.

V POST

டிசம்பர் 07, 2020

வரத்து வாய்க்கால் சீரமைப்பு

 


பச்சை மலையில் உற்பத்தியாகி வரும் காற்றில் இருந்து விசுவக்குடி ஏரிக்கு வரும் வரத்து கால்வாயில் உள்ள முட்புதர்களை அகற்றி இன்று (டிசம்பர் 07) சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. படம்: அருகில் ஊராட்சியில் தலைவர் மருதாம்மாள் மற்றும் இரண்டாவது வார்டு உறுப்பினர் குதரத்துல்லா. V POST