பெரம்பலூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் பரந்து விரிந்து இருக்கும் பச்சைமலையில் உற்பத்தியாகும் ஆறுகளில் கல்லாறும் ஒன்று.
பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரிலும் கல்லாறு என்ற பெயரில் ஒரு ஆறு
பாய்கிறது. அதே ஊரில் கல்லாறு என்ற பெயரில் ஒருமாத இதழும் வெளியாகிறது.
பாய்கிறது. அதே ஊரில் கல்லாறு என்ற பெயரில் ஒருமாத இதழும் வெளியாகிறது.
வேலூர் மாவட்டத்திலும் கல்லாறு என்ற பெயரில் ஒரு ஆறு ஓடுகிறது.
தென்கேரளத்திலும் கல்லாறு என்ற பெயரில் ஒரு நதி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி அருகே 19 கோடி மதிப்பீட்டில் கல்லாற்றின் குறுக்கே 31 ஆயிரம் மில்லி கனஅடி நீரை சேமிக்கும் விதமாக 615 மீட்டர் நீளத்தில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி அருகே 19 கோடி மதிப்பீட்டில் கல்லாற்றின் குறுக்கே 31 ஆயிரம் மில்லி கனஅடி நீரை சேமிக்கும் விதமாக 615 மீட்டர் நீளத்தில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலையில் உற்பத்தியாகும் கல்லாறு, கடலூர் மாவட்டம் வெள்ளாற்றில் இணைந்து பரங்கிபேட்டை அருகே வங்காளவிரிகுடா கடலில் சங்கமிக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம் ஏரி மற்றும் கடலூர் மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள வெலிங்டன் ஏரிகளின் நீர் ஆதரமாக கல்லாறு உள்ளது.
தகவல்: தௌ.மு.ஜகரிய்யா