![]() |
| விசுவக்குடி ஜமாத் தலைவர் அப்துல் ஹமீத், பள்ளியின் இமாம் சுலைமான் மற்றும் இளைஞர்கள் ''இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வோம்' என்ற உறுதிமொழியுடன் வாழ்த்துக்கள் கூறி புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். |
இஸ்லாமியர்களின் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை கடந்த திங்கள் அன்று (20.08.2012) விசுவக்குடியில் கொண்டாடப்பட்டது. 30 நாட்கள் நோன்பிருந்தோர், நோன்பிருந்து பண்டிகையை கொண்டாடினர். இதையொட்டி விசுவக்குடி மசூதியில் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.
இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என சுமார் 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டி, தழுவி வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.
