மார்ச் 24, 2012

கல்லாற்றில் அணை அமைக்க சட்டமன்றத்தில் உரையாற்றுவேன். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேச்சு!


பெரம்பலூர் அருகே விசுவக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக 17-03-2010 அன்று சமூக எழுச்சி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

மாலை 6 மணிக்கு புலவர் அலியார் திடலில் இறைமறை ஓதி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஜாமியா ஜன்னத்துன் நிஸ்வான் தலைவர் அப்துல் ஹை அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட தலைவர் மீராமொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுல்தான் மொய்தீன், மாவட்ட செயலாளர் தாஹிர் பாஷா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் பொறியாளர் ரசீத், தமுமுக மாவட்ட பொருளாளர் முகமது இலியாஸ், வேப்பந்தட்டை ஒன்றிய
செயலாளர் விசுவக்குடி சபியுல்லா, விசுவக்குடி மமக உறுப்பினர் முஸ்தபா, மாவட்ட தமுமுக துணைச்செயலாளர் வதூத் என்கிற குதரத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை ஜெய்னுலாப்தீன் சுவனத்தை நோக்கி என்ற தலைப்பில் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தார். பிறகு பேசிய தமுமுக வின் மூத்த தலைவரும் இராமநாதபுர சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் இந்த பகுதி மக்களின் நலன் கருதி சரியான நேரத்தில் உரையாற்றுவதாக உறுதியளித்தார். குடிநீர் தேவை, விவசாயத்திற்கு நீர்பாசனம் மட்டுமில்லாது மின்சாரம் உற்பத்தியும் செயல்படும் விதமாக இந்திட்டத்தை நிறைவேற்ற மனிதநேய மக்கள் கட்சி பாடுபடும் என்றார். மேலும் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தி தர தொடர்ந்து கோரிக்கை எழுப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் லப்பைகுடிகாடு, வி.களத்தூர், வாலிகண்டபுரம், பெரம்பலூர், பூலாம்பாடி, அரும்பாவூர், பெரியம்மா பாளையம் போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்கள் ஆன அரியலூர், திருச்சி போன்ற ஊர்களில் இருந்து ஏரளமானனோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்வூரை சேர்ந்த ஒருவர் விசுவக்குடியில் இது வரலாறு காணாத கூட்டம் என கூறினார். மேலும் பெண்கள், சிறுவர்கள், வயதில் முதிர்ந்தவர்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. ஆயிரகணக்கானவர்கள் கலந்துக் கொண்ட இந்நிகழ்வில் காவல்துறையின் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருந்தது.

கூடங்குளம் அணுஉலையை அரசு கைவிட வேண்டும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு என்று தலைமை ஹாஜியினை நியமிக்க வேண்டும். விசுவக்குடி பகுதிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். கோயில்களில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவது போல் தர்காகளிலும் அரசு அன்னதானம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை விசுவக்குடியின் தமுமுக பொறுப்பாளர் முஹம்மது யாசீன் அழகாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை தமுமுக துணை தலைவர் ஜபார் அலி வரவேற்றார். இறுதியாக சகோதரர் முகமது சாதிக் பாட்சா நன்றி கூறினார்.
      செய்தி ஜாபர் அலி MBA,  படங்கள்: பாவா பக்ரூதீன் உதவி: ச.முகமது யாசீன்
Previous Post
Next Post

post written by: