நவம்பர் 26, 2015
நவம்பர் 18, 2015
மாவட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விசுவகுடி அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள விசுவகுடி அணையில் 16 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அணையை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விசுவகுடி அணைபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி விசுவகுடியில் கல்லாற்றின் குறுக்கே பச்சமலையையும், செம்மலையையும் இணைத்து ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டப்பட்டுள்ளது.
இந்த அணை கட்டுமான பணியின் பெரும்பகுதி முடிந்து தற்போது பெய்து வரும் பருவ மழைநீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதன்முதலாக அணையில் தேக்கி வைக்க உத்தரவிட்டனர்.
33 அடி உயரம் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக 16 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
புதிய அணைக்கட்டு என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி படிப்படியாக நீரை தேக்கி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் அணைக்கு வரக்கூடிய முழு தண்ணீரையும் தேக்கி வைக்காமல் பெரும்பகுதி தண்ணீரை கல்லாற்றில் வெளியேற்றி வருகின்றனர். கல்லாற்று தண்ணீர் வெங்கலம் ஏரிக்கு செல்கிறது.சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள முதல் அணை என்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அணையை பார்ப்பதற்கு வந்து செல்கின்றனர்.
மேலும் பச்சைமலை மற்றும் செம்மலையின் இயற்கை அழகையும், அணையில் தேங்கியுள்ள (செம்மண்ணுடன் கலந்த) செந்தண்ணீரையும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். நேற்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்கியதால் அணையை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நன்றி
தினதந்தி
http://m.dailythanthi.com/MDTDetailpage/Detailpage?parentsectionid=2§ionid=9&districtid=20&articleid=B05E06A6-26FC-4682-9C92-E79717711F67
நவம்பர் 11, 2015
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஹம்மது பட்டினம் கிளை சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இன்று வெள்ளி கிழமை (Nov 10, 2015) மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஷேக் ராஸித் தலைமை தாங்கினார்.
இணைவைப்பு (ஷிர்க்) ஒரு பெறும் பாவம் எனும் தலைப்பில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட திருச்சி மாவட்ட துணைத்