![]() |
| அரியலூர் பெரம்பலூர் பகுதியில் காணப்பட்ட சொரோடோப்ஸ் வகை டைனோசர் |
சொரோபோட்ஸ்கள் என்றால் என்ன?
அப்படி ஒரு இனம் இருந்ததா? அப்படியென்றால் அந்த இனம் எப்படி அழிந்தது? என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விசுவக்குடி அருகே உள்ள பச்சைமலை பகுதியிலும் அவை வாழ்ந்திருக்கலாம் என்று எண்ண தோன்றுகிறது!.

2006ல்
நடத்திய ஆய்வின் படி குறைந்தது 527 வெவ்வேறு டைனோசர் இனங்கள் உள்ளன.
ஆனால் மொத்தம் 1844 தொன்மா இனங்கள் இருந்திருக்கக்கூடும் என
கணிக்கின்றனர்.
ஏறத்தாழ
230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள்
பூமியின் நிலத்தரையின் முழுவல்லமையுடன் வாழ்ந்து வந்த முதுகெழும்பு
விலங்கினங்களான இவை, ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு பேரழிவு
நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயிற்று என நம்பபடுகிறது.
பெரும்பாலும் டைனோசர்கள் இரண்டுகால்கள், நான்கு கால்கள் என பலவிதங்களில் வாழ்ந்துள்ளன.
நீரில் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை, நீரிலும் நிலத்திலும் வாழ்பவை, தாவரங்களை உண்பவை, மாமிசங்களை உண்பவை மற்றும் தாவரம் மாமிசம் இரண்டையும் உண்பவை என பலவகையான டைனோசர் இனங்கள் வாழ்ந்துள்ளன.
இவற்றின் குறிப்பாக இந்த பெரம்பலூர் அரியலூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சொரோபோட்ஸ் நான்கு கால்களுடன் கழுத்து நீண்டு இருக்கும் வகையை சார்ந்தவை. இவை இலைதலைகளை உண்பவையாக இருந்துள்ளன.

| அரியலூரில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட சொரோபோட்ஸ் வகை டைனோசர் முட்டைகள். இவை ஒவ்வொன்றும் கால்பந்து அளவில் உள்ளது. |
சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர்
மு.ராம்குமார் தலைமையில் பேராசிரியர் கு.அன்பரசு, விரிவுரையாளர்
இரா.சுரேஷ் மற்றும் ஆய்வு மாணவர்கள் தி.சுகந்தா, கு.சதீஷ் ஆகியோர் அடங்கிய
குழுவினர் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து அரியலூருக்கு வடகிழக்கே ஆய்வு
மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர்
நகரை ஒட்டிய இப்பகுதியில் குவியல் குவியலாய் பல அடுக்குகளில் இருந்த
டைனோசர் முட்டைப் படிமங்கள், முட்டையிட்ட இடங்கள், டைனோசர் எலும்புகள்
ஆகியவற்றைக் கண்டுபிடித்துச் சேகரித்திருக்கிறார்கள்.
இங்கிருந்து
சுமார் 60 டைனோசர் முட்டைகளை எடுத்திருக்கும் இந்தக்குழு, மேலும்
ஆயிரக்கனக்கான முட்டைகள் படிமங்களாக இருப்பதையும் கண்டறிந்துள்ளது. மணலில்
வளை தோண்டி கூடு மாதிரி உருவாக்கி, அதில்முட்டைகள் இடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கூட்டிலும் ஆறேழு முட்டைகள் இருக்கின்றன. இப்படி எராளமான
முட்டைக் குவியல்கள் இருப்பதால், ஒரு காலத்தில் இங்கு ஆயிரக்கனக்கான
டைனோசர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஒவ்வொன்றும்
ஒரு கால்பந்து அளவில் இருக்கின்ற இந்த முட்டைகள் சொரோபோட்ஸ் எனப்படும்
கழுத்து நீண்ட தாவர உண்ணி டைனோசோர் வகையை சேர்ந்தவை என்று ஆய்வுக்
குழுவினர் தெரிவிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் தற்போதுள்ள நிலப்பகுதிகள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதிகளாக இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடற்கரையாக இருந்தது. பின்னர் நடைப்பெற்ற புவியியல் நிகழ்வுகளால் பூமிக்கு அடியில் உள்ள பாறை தட்டுகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி கொண்டிருப்பதால், அரியலூர் பகுதி மேலே உயர்த்தப்பட்டு கடல் நீர் வற்றியுள்ளது.
கடலை ஒட்டிய சதுப்பு நில பகுதிகளில்தான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான மித வெப்ப சீதோஷ்ணம் நிலவியது. நிலப்பகுதியின் உட்புறம் மிகுந்த வெப்பமும் வறட்சியும் கொண்டதாக இருந்தது.
அரியலூர் அருகில் இப்போது வெற்றுப் பாறையாக இருக்கும் இந்தப் பகுதியில் அந்தக் காலத்தில் வற்றாத ஆறு ஓடி இருக்கிறது. நல்ல தண்ணீரோடு மிகப் பெரிய ஏரி இருந்திருக்கிறது. கடலும் மிக அருகாமையில் இருந்துள்ளது. எனவேதான் இங்கு டைனோசர்கள் பல்கிப் பெருகி பலகாலம் வாழ்ந்துள்ளன.

இவை அரியலூர் பெரம்பலூரிலிருந்து விசுவக்குடி அருகே உள்ள பச்சைமலை குறிப்பிட்ட தொலைவில் இருப்பதால் சொரோடோப்ஸ்கள் உணவைத் தேடி பச்சைமலை பகுதியில் அலைந்திருக்கலாம். ஏன் அவற்றின் இனப்பெருக்க வாழ்விடமாகக் கூட அமைந்திருக்கலாம்?
(தௌ.மு.ஜகரிய்யா...)
aahazack@gmail.com