டிசம்பர் 31, 2015

வருது வருது விசுவக்குடி அணை!
வணக்கம் நண்பர்களே...

தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணை, சாத்தனூர் அணை எனச் சொல்லும் அந்தப் புகழ்பெற்ற பட்டியலில் சீக்கிரமே எங்கள் ‘விசுவக்குடி அணை’யும் வரும். இன்னும் திறப்பு விழா காணாத அந்த அணைக்கு ஒரு விசிட் அடித்தோம். அந்த அணை பற்றிய தகவல்கள்...
  • ஆங்கிலேயர் ஆட்சி செய்த 1942-ம் ஆண்டில் இருந்தே, ஆலோசிக்கப்பட்ட திட்டம், ‘விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம்’. தற்போது நிறைவேற்றப்பட்டதில், மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
  • 2011-ல், ‘இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையான, விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும்’ என தனது தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். 2012 செப்டம்பர் 28-ல் அணைக்கான வேலைகள் தொடங்கப்பட்டன.

டிசம்பர் 23, 2015

வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாமல்  4 கிராம மக்களை ஏமாற்றிய அரசு அதிகாரி. இது வேப்பந்தட்டையில்..!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் அன்னமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில்  விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், அன்னமங்கலம் பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.

பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

 ஊராட்சியின் தலைவர் முதல் முதல்வரின் தனிபிரிவு வரை கோரிக்கை வைத்தும் இந்த சாலை தொடர்ந்து சீர்செய்யபடாமல் உள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த மக்கள்

டிசம்பர் 22, 2015

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம், டி.களத்தூர், பூலாம்பாடி, கள்ளப்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 40 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், உச்சநீதிமன்ற தடையால் கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை.
விசுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம். காளைகளுக்கு பல்வேறு ஊட்ட உணவுகளையும், நடைப் பயிற்சி, நீச்சல் பயிற்சிகள் அளித்து மாதம்தோறும் ரூ. 20 ஆயிரம் செலவழித்து வருகிறோம். எனவே, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த, தமிழக அரசிடம் அனுமதி பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
தினமணி
பச்சைமலை - பல தகவல்கள்

1. தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் பச்சைமலையும் ஒன்று.

2.வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ள பச்சைமலை சுமார் 19 ஆயிரத்து 76 ஹெக்டேர் பரப்பில் விரிந்துள்ளது.

3. இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 1072 மீட்டர் வரை உயரம் கொண்டது.

4. பச்சைமலை பரப்பளவில் சுமார் 527 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

5. பச்சைமலையில் வாழும் மக்களை பச்சை மலையாளி எனவும் அழைகின்றனர்.

6. பச்சைமலைவாழ் மக்கள் பெரும்பாலும் கவுண்டர் சாதி இனத்தை

டிசம்பர் 21, 2015

பரவசமூட்டும் பச்சைமலை (படங்கள் இணைப்பு...)
பெரம்பலூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களின் மையபகுதியில் பச்சைமலை உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல எங்கும் பச்சை போர்த்திய மரங்கள், ஜில் என்ற காற்று, மூலிகை சுவாசம் என மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது.

வழக்கமான கோடை சுற்றுலவாக இல்லாமல், புதிய அனுபவம் பெறவிரும்புவோர் பச்சைமலை சுற்றுலா சென்று வரலாம்.

பச்சைமலையின் அனைத்து பகுதிகளுக்கும் தார்சாலை வசதி உள்ளது.

மலையின் அழகை காண திருச்சி மாவட்டம் சோபனாபுரம் வழியாகவும், கீரம்பூர் வழியாகவும் உள்ள வழிதடங்களில் சென்று ரசித்து வரலாம். பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

டிசம்பர் 20, 2015

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி விசுவக்குடியில் தமுமுக நடத்துகிறது
விசுவக்குடியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி அல் - ஜன்னத் சமுதாய நலக்கூடத்தில் வருகிற 27ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.

காலை 9:30 மணியளவில் தொடங்கும் நிகழ்ச்சியில் அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் பா.செல்வகுமார் அவர்களும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்

நவம்பர் 26, 2015

குண்டும் குழியுமான அன்னமங்கலம் சாலை. விரைந்து சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை
தமிழ் இந்து நாளிதழில் இன்று நவம்பர் ‪26ம் தேதி‬ வெளியாகியுள்ள செய்தி.


நவம்பர் 18, 2015

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விசுவகுடி அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள விசுவகுடி அணையில் 16 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அணையை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விசுவகுடி அணைபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி விசுவகுடியில் கல்லாற்றின் குறுக்கே பச்சமலையையும், செம்மலையையும் இணைத்து ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த அணை கட்டுமான பணியின் பெரும்பகுதி முடிந்து தற்போது பெய்து வரும் பருவ மழைநீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதன்முதலாக அணையில் தேக்கி வைக்க உத்தரவிட்டனர்.

33 அடி உயரம் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக 16 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
புதிய அணைக்கட்டு என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி படிப்படியாக நீரை தேக்கி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

மேலும் அணைக்கு வரக்கூடிய முழு தண்ணீரையும் தேக்கி வைக்காமல் பெரும்பகுதி தண்ணீரை கல்லாற்றில் வெளியேற்றி வருகின்றனர். கல்லாற்று தண்ணீர் வெங்கலம் ஏரிக்கு செல்கிறது.சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள முதல் அணை என்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அணையை பார்ப்பதற்கு வந்து செல்கின்றனர். 

மேலும் பச்சைமலை மற்றும் செம்மலையின் இயற்கை அழகையும், அணையில் தேங்கியுள்ள (செம்மண்ணுடன் கலந்த) செந்தண்ணீரையும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். நேற்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்கியதால் அணையை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நன்றி
தினதந்தி
http://m.dailythanthi.com/MDTDetailpage/Detailpage?parentsectionid=2&sectionid=9&districtid=20&articleid=B05E06A6-26FC-4682-9C92-E79717711F67

நவம்பர் 11, 2015

முஹம்மது பட்டினத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஹம்மது பட்டினம் கிளை சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இன்று வெள்ளி கிழமை (Nov 10, 2015) மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஷேக் ராஸித் தலைமை தாங்கினார்.

இணைவைப்பு (ஷிர்க்) ஒரு பெறும் பாவம் எனும் தலைப்பில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட திருச்சி மாவட்ட துணைத்

அக்டோபர் 31, 2015

பிள்ளையார் பாளையத்தில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி அருகே உள்ள பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் செம்படையான்(வயது50) விவசாயி. இவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொட்டகையில் ஆடுகளை கட்டிவிட்டு செம்படையான் வீட்டிற்கு வந்து விட்டார்.

நேற்று காலை வழக்கம் போல் சென்று பார்த்த போது 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடப்பதையும், 2 ஆடுகள் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதையும் கண்டு

அக்டோபர் 16, 2015

விசுவக்குடியில் "அம்மா திட்ட" முகாம்

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை  வட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடியில் அம்மா திட்ட முகாம் நடைப்பெற்றது.

வருவாய்த்துறை அலுவலர்கள் குழு இன்று வெள்ளிக் கிழமை மதியம் மக்களுடைய குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று, ஓய்வூதியம், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்று, வருமானம் மற்றும் இருப்பிடச்சான்றிதல், குடும்ப அட்டை வழங்குதல் ஆகிய கோரிக்கை அடங்கிய விண்ணப்பங்களை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
இந்த முகாமில் வருவாய் அலுவலர்கள் மற்றும் அன்னமங்கம் ஊராட்சி மன்ற தலைவர் குதரத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 21, 2015

விசுவக்குடியில் சொற்பொழிவு நிகழ்ச்சி
விசுவக்குடி அல் ஜன்னத் சமுதாய நலக் கூடத்தில் நேற்று 20ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூரில் உள்ள இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் முதல்வர் மௌலவி இஹ்சானுல்லா பாஜில் பாகவி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் நபிகள் நாயகத்து இஸ்லாமும், நவீன இஸ்லாமும் என்கிற தலைப்பில் சென்னை அடையாரில் உள்ள அல் ஹுதா அரபு கல்லூரியின் முதல்வர் சதீதுத்தீன் பாகவி சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

விசுவக்குடி முஸ்லிம் ஜமாத்தார்களும், அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினரும் ஏற்பாடு செய்த இந் நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

செப்டம்பர் 20, 2015

விசுவக்குடி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க தமுமுக கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று (19) நடைப்பெற்றது.

வடக்கு மாதவி சாலையில் உள்ள NSK மஹாலில் மாலை 4 மணிக்கு நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் முஹம்மது இலியாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விசுவக்குடி குதரத்துல்லா, மண்டல தேர்தல் அதிகாரி மீரான் மொய்தீன், மாநில தேர்தல் ஆணையர் தாஹிர் பாஷா, மனிதநேய

செப்டம்பர் 18, 2015

விசுவக்குடி இளைஞர் சவூதி அரேபியாவில் பலி (படங்கள் இணைப்பு)
விசுவக்குடியில் உள்ள ஹழ்ரத் முகமது அலி அவர்களின் மகன் ஜமால் முஹம்மது (32) சவூதி அரேபியாவில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் வபாத் ஆனார்.

இவர் சவூதி அரேபியா ரியாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கனரக வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் சவூதி அரேபியா வந்து ஒரு ஆண்டு காலம் ஆன நிலையில் இந்த சாலை விபத்து இடம் பெற்றுள்ளது.

சவூதி அரேபியா கிழக்கு மாகாணத்தில் உள்ள அல் சல்ஹசா நகரத்தில் அல் மனா மருத்துவமனை அருகில் உள்ள அடக்கஸ்தளத்தில் 18ம் தேதி வெள்ளி கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு இறுதி சடங்கு நடைப்பெற்றது.

ஆகஸ்ட் 18, 2015

முஹம்மது பட்டினத்தில் பேருந்து சிறைபிடிப்பு
வேப்பந்தட்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சியில் அரசலூர், விசுவகுடி, முகமதுப்பட்டினம், பிள்ளையர்பாளைம் ஆகிய கிராமங்கள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த சாலையை