விசுவக்குடியில் தடையில்லா மின்சாரம் வழங்க 12வதாக 63 kv திறன் உள்ள புதிய மின் மாற்றி அமைத்து, இயக்கி வைக்கப்பட்டது
விசுவக்குடியில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை காரணமாக மின்சார உபகரணங்களை சரியாக இயக்க முடியாத சூழல் நிலவி வந்தது.
இதனைத் தொடர்ந்து மின்சார வாரியத்திற்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டி கோரிக்கை எழுப்பப்பட்டது.
கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய மின்மாற்றி அமைத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்து வைக்கப்பட்டது.
இந்த புதிய மின்மாற்றியை பெரம்பலூர் மாவட்ட செயற்பொறியாளர் இயக்கலும் காத்தலும் அசோக் குமார், பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் கிராமியம் செல்வராஜ் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் இயக்கி வைத்தனர்.
வேப்பந்தட்டை உதவி மின் பொறியாளர் செந்தில்குமார், குரும்பலூர் உதவி மின்பொறியாளர் பிரபாகரன், மின் ஆக்க முகவர் (மின்சார போர்மேன்) வேணுகோபால், மின்பாதை ஆய்வாளர் சுரேஷ் மற்றும் செந்தில்குமார்,மின்சார வாரிய ஊழியர்கள் உடன் இருந்தனர்.
மேலும் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விசுவக்குடி ஜமாத் நிர்வாகத்தின் சார்பாக மின்சார வாரியத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.







