செப்டம்பர் 28, 2018

விசுவக்குடியில் சட்ட விழிப்புணர்வு கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விசுவக்குடியில் நாளை சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற உள்ளது.

நமது பஞ்சாயத்தில் உள்ள குறைகளை மனுக்கள் மூலம் எவ்வாறு தீர்வு காண்பது? தகவல் அறியும் உரிமை சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது? போன்ற தலைப்பில் பேசப்பட இருக்கிறது.

எனவே இளைஞர்கள் அனைவரும் விசுவக்குடி அல் ஜன்னத் சமுதாயக் கூடத்தில் நடைப்பெறும் இந்த நிகழ்வில்  தவறாமல் கலந்து கொள்ளுமாறு அல் அமீன் இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக அழைப்பு விடுக்கப்படுகிறது.

செப்டம்பர் 11, 2018

மழை பெய்ய வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
நேற்று முன்தினம் விசுவக்குடியில் மழை வேண்டி நடைபெற்ற  சிறப்பு தொழுகை நிகழ்வு தினத்தந்தி நாளிதழில் பக்கம் 7ல் செய்தியாக வெளிவந்துள்ளது.

நன்றி: தினத்தந்தி


ஜூன் 05, 2018

பள்ளி அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு
விசுவக்குடி பள்ளிவாசல் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே குப்பைகள் கொட்டபடுகிறது. இதனால் துறுநாற்றம் விசுவது மட்டுமில்லாமல் அந்த குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

நன்றி:
தினத்தந்தி
பக்கம் 18
திருச்சி பதிப்பு

ஏப்ரல் 08, 2018

விசுவக்குடி ஜல்லிகட்டு விழா 2018
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் இன்று (08.04.2018) ஜல்லிகட்டு விழா நடைப்பெற்றது. இதில் 309 காளைகள் கலந்து கொண்டன.

நன்றி: வேல்முருகன் புகைப்பட கலைஞர்