ஜூலை 30, 2020

இறப்பு செய்தி

விசுவக்குடி முதல் தெருவில் வசிக்கும் அப்துல் சலாம் அவர்களின் தாயார் கட்ட ஜபார் அவர்களின் மனைவி ஜெமீலா பீவி அவர்கள் சற்று முன் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லா நாளை வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பிறகு விசுவக்குடி கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. V POST

இறப்பு செய்தி


விசுவக்குடி முதல் தெருவில் வசிக்கும் அப்துல் சலாம் அவர்களின் தாயார் கட்ட ஜபார் அவர்களின் மனைவி ஜெமீலா பீவி அவர்கள் சற்று முன் (ஜுலை 30) வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லா நாளை வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பிறகு விசுவக்குடி கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

ஜூலை 26, 2020

விசுவக்குடியில் உடல்நலக்குறைவால் குரங்கு மரணம்
விசுவக்குடி பள்ளிவாசல் தெருவில் காயத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு குரங்கு ஒன்று மரணவேதனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது.

இதனை பார்த்து காப்பாற்ற வேண்டும் என கருதிய அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் வந்து சிகிச்சை அளித்து அந்த குரங்கை வனப்பகுதியில் விட்டுவிடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், வனத்துறையினர் வருவதற்கு 1½ மணிநேரம் தாமதமானதால் அந்த குரங்கு பரிதாபமாக துடிதுடித்து இறந்து போனது.

பின்னர் வந்த வனத்துறையினர் பரிசோதனை செய்து குரங்கு இறந்துவிட்டது, வேப்பந்தட்டை கால்நடை மருத்துவரிடம் இறந்ததற்கான காரணத்தை அறிந்து, சான்றிதழ் பெற்ற பின் வனப்பகுதியில் புதைத்து விடுவோம் என கூறி குரங்கை ஒரு சாக்கு பையில் போட்டு இரண்டு சக்கர வாகனத்தில் அலட்சியமாக எடுத்து சென்றனர்.  இதை பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

ஜூலை 05, 2020

சவுதியில் இறந்த இந்துவின் உடலை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த தமுமுக தன்னார்வலர்கள் !

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தன்(வயது 57). சவுதி அரேபியா நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி உயிரிழந்துவிட்டார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

கந்தன் இறந்த செய்தி குடும்பத்தினருக்கு தெரிந்தவுடன் மாவட்ட நிர்வாகத்தை அணுகி, உடலை மீட்டுத்தர கோரிக்கை மனு அளித்தனர். அப்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததால், அவரது உடலை கொண்டு வருவதில் சிக்கல் நீடித்தது.

இந்நிலையில் கந்தனின் குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடலை இந்தியா கொண்டுவர உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து த.மு.மு.க. மாநில பொது செயலாளர் ஹாஜாகனி, சவுதி மண்டல த.மு.மு.க. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடலை கொண்டுவர முயற்சி மேற்கொண்டார். அங்குள்ள நிர்வாகிகள் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேசி கந்தனின் உடலை சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் சரக்கு விமானம் வாயிலாக அனுப்பி வைத்தனர்.

விமானத்தில் வந்த உடலை சென்னை விமான நிலையத்திலிருந்து பெற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆம்புலன்சில் ஏற்றி மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஹயாத் பாஷா, மாவட்ட தலைவர் சுல்தான் மைதீன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் குதரத்துல்லா உள்ளிட்டோர் உடலை அரசலூர் கிராமத்திற்கு கொண்டுவந்து குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

அங்கு கந்தனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கந்தனின் உடலை அரசலூர் கொண்டு வர உதவிய த.மு.மு.க.வினருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.