ஜூன் 26, 2017

விசுவக்குடியில் ரமலான் உற்சாக கொண்டாட்டம்
பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடியில் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று திங்கள் கிழமை (26.06.2017) கொண்டாடப்பட்டது. இதையொட்டி விசுவக்குடி அத்தக்வா பள்ளிவாசலில் காலை 9 மணிக்கு சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.


29 நாட்கள் தராவிஹ் தொழுகையை நடத்திவந்த ஹாபிள் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் தொழுகை நடைப்பெற்றது. அதன் பிறகு பள்ளியின் இமாம் மௌலான முஹம்மது சுலைமான் அவர்கள் குத்பா எனும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என சுமார் 1000க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டனர். தொழுகை முடிந்ததும் இனிப்புகள் வழங்கியும், ஒருவரை ஒருவர் கட்டி, தழுவியும் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.





ஜூன் 16, 2017

தேசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற விசுவக்குடி ரமேஷ்!

பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். மாற்று திறனாளியான இவருக்கு வயது 28. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் ஓட்டுனர் பணி புரிகிறார்.  கடந்த ஜூன் 3 முதல் 10 ம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் நடைப்பெற்ற தேசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார்.

இதில் குண்டு எறிதல் போட்டியில் 11.40 மீட்டர் தூரத்திற்கு குண்டிணை வீசி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும் கால் குறைபாடு உடையோருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் 13.18 விநாடிகளில் கடந்து மற்றும் ஒரு தங்கத்தை வென்றார்.

நமது ஊருக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த இவரை பாராட்டுவது மட்டுமில்லாமல் அடுத்த போட்டிகான பயிற்சியில் ஈடுபட கொடையாளர்கள் உதவிசெய்ய முன்வரவேண்டும்.

திறமைக்கு ஊனம் தடையில்லை என்பதை நிரூபித்த விசுவக்குடி கிராமத்தை சார்ந்த ரமேஷ் சர்வதேச அளவில் மேலும் சாதனை படைக்க வாழ்த்துவோம். +91 98 65 517335

ஜூன் 11, 2017

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

நமதூர் விசுவக்குடியில் நேற்று (ஜூன்10) இந்த ஆண்டு 10 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது.

விசுவக்குடி இணையதளம் சார்பாக மௌலானா அப்துல் ஹை அவர்களும், அத்-தக்வா பள்ளியின் இமாம் மௌலான முஹம்மது சுலைமான் அவர்களும் பரிசுகளை வழங்கினார்கள்.

மேலும் இந்த ஆண்டு விசுவக்குடியில் நீதித்துறை சார்ந்த படிப்புகளை படிக்க ஆர்வம் இருந்தும், படிக்க வசதிகள் இல்லாத நிலையில் இருந்தால் அவர்களுக்கான கல்வி கட்டணத்தை இன்ஷா அல்லாஹ் விசுவக்குடி இணையதளம் ஏற்க தயாராக உள்ளது என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.

ஜூன் 08, 2017

விசுவக்குடியில் சலூன் திறப்பு

விசுவக்குடியில் சலூன் கடை இல்லாத காரணத்தால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் முடிதிருத்தம் செய்ய முடியாமல் சிரமபட்டு வந்தனர். இந்த சிரமத்தை போக்கும் விதமாக ரீகல் சலூன் இன்று வியாழக் கிழமை (08.06.17) முதல் விசுவக்குடியில் தனது சேவையை தொடங்கி உள்ளது.

இதுகுறித்து அதன் உரிமையாளர் கண்ணன் கூறியதாவது:

இங்கு நவீன உபகரணங்கள் கொண்டு ஹேர் கட்டிங், ஹேர் கலரிங், பேஸ்வாஷ், பேஸ் பிளிச்சிங் போன்றவை குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான முறையில் செய்து தரப்படும். மேலும் மணமகன் அலங்காரம் குறித்த நேரத்தில் செய்து தரப்படும். எனவே விசுவக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதி நண்பர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.