ஆகஸ்ட் 06, 2012

குவைத்வாழ் விசுவக்குடி ஜமாத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு


குவைத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான விசுவக்குடி மக்கள் பல்வேறு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் குழு அமைத்து மாதத்திற்கு ஒருமுறை சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருவது வழக்கம். இந்த குழுவின் தலைவராக மௌலான மீராசா  உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி குவைத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் அரசியல் எழுச்சிக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்
பேராசிரியர் ஜவாஹிருல்லா மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம்பாஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு உரையாற்றினர்.

குவைத் மண்டல தமுமுக-வின் அழைப்பை ஏற்று கலந்துக் கொண்ட மௌலான மீராசா அவர்கள் நிகழ்ச்சியின் இறுதியில் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசினார். 

ஒருசில நிமிடங்கள் நடைப்பெற்ற இந்சந்திப்பில் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி விசுவக்குடியில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் கல்லாற்றில் அணைஅமைக்க சட்டமன்றத்தில் உரையாற்றுவேன் என்றீர்கள், அது சம்மந்தமாக தங்களுக்கு மின்னஞ்சலிலும் கோரிக்கை எழுப்பப்பட்டது என்று கேட்ட போது குறிக்கிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள், நீங்கள் விவசாயிகள் சார்பாக அனுப்பிய மின்னஞ்சலை பார்வையிட்டதாகவும், தங்களின் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் அவர்களிடம் பேசியதற்கு இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறியதாக கூறினார். 

இந்நிகழ்வில் குவைத்தில் வசித்துவரும் பெரும்பாலான விசுவக்குடியை சாந்தவர்களும் கலந்துக் கொண்டனர். குவைத்தில் செயல்படும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் தலைவராகவும் மீராசா உள்ளார். சந்திப்பின் இறுதியில் பிறைமலர்ரையும், நாள்காட்டியும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  வழங்கினார்.




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களிடம் குவைத்வாழ் விசுவக்குடி ஜமாத் தலைவர் நினைவு பரிசு வழங்குகிறார்.


Previous Post
Next Post

post written by: