பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் தான் விசுவக்குடி.
பெயர்காரணம்:
குடி என்றால் சங்க காலத்தில் மக்களின் இருப்பிடங்களை குடி என சூட்டியிருக்கின்றன. விசுவாசம் மிகுந்த இறையடியார்கள் இங்கு குடியிருப்பதால் விசுவக்குடி என அழைக்கபடுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் இவ்வூர் பிஸ்மில்லாகுடி என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குடி என்றால் சங்க காலத்தில் மக்களின் இருப்பிடங்களை குடி என சூட்டியிருக்கின்றன. விசுவாசம் மிகுந்த இறையடியார்கள் இங்கு குடியிருப்பதால் விசுவக்குடி என அழைக்கபடுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் இவ்வூர் பிஸ்மில்லாகுடி என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எல்லை:
வடக்கு திசையில் முகமது பட்டினம் கிராமமும், தெற்கு,மேற்கு திசையில் உள்ள பச்சை மலையானது கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும். இந்த மலையில் உற்பத்தியாகிவரும் கல்லாறு விசுவக்குடி கிராம மக்களின் முக்கிய ஆறு. இது விசுவக்குடியின் குடிநீர் தேவையை மட்டுமில்லாது விவசாயத்திற்கு நீர் ஆதாரமாகவும் உள்ளது.
தொழில்:
வடக்கு, தெற்கு, மேற்கு என மலைகளால் சூழப்பட்ட விசுவக்குடியை சுற்றிலும் வயல்வெளிகள் நிறைந்து காணபடுகிறது. முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.
மக்கள் தொகை:
2001ம் ஆண்டின் மக்கள் தொகை கணகெடுப்பின்படி ஆண்கள் 704 பேரும், பெண்கள் 611 பேர் என மொத்தம் 1330 பேர் உள்ளனர். 2011 ம் ஆண்டு கணக்கின்படி இங்கு 860 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
சமூக குழுக்கள்:
தலித்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
வழிபாட்டு தளங்கள்:
இந்து சகோதரர்களின் கோயில்கள் மட்டுமில்லாது விசுவக்குடியில் இசுலாமியர்களின் தொழுகைக்கூடமான ஜூம்மா பள்ளிவாசல் என்கிற பெயரில் 85 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக இவ்வூரின் புராதானசின்னமாக நின்று கொண்டிருக்கிறது. இவ்வூர் மாவட்டத்தின் தலைநகரான பெரம்பலூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.
அரசியல்:
விசுவக்குடி அமைந்துள்ள அன்னமங்கலம் ஊராட்சியில் இவ்வூரை சேர்ந்த குதரத்துல்லா தலைவராக உள்ளார். இவ்வூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக கல்லாற்றின் குறுக்கே விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம் அமைக்க வேண்டும் என்பதாகும்.


