*
வக்பு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மீட்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூர் கிராமத்தில் ஹஜ்ரத் சையத் முஸ்தபா தர்கா உள்ளது. இந்த தர்காவினை சார்ந்து சர்வே எண் 499 ல் 6.89 ஏக்கர் நிலம் உள்ளது.
முஸ்லீம்கள் பயன்பாட்டிற்காக நவாப் காலத்தில் கொடுக்கப்பட்ட இந்த நிலத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் தற்போது தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுபாட்டில் உள்ளது.
இந்நிலையில் இந்த வக்பு நிலத்தின் குறிப்பிட்ட பகுதி அருகிலுள்ள கிராமத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இந்த தர்காவின் முத்தவல்லியாக உள்ள அப்துல் சலாம் பலமுறை கூறியும் ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்து வருகின்றனர்.
நாம் அனைவரும் ஒன்றுபட்டு முயற்சி மேற்கொண்டால் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்தை மீட்க முடியும். அதற்கு சமூக ஆர்வலர்கள், சமுதாய அமைப்பினர் அனைவரும் சம்மந்தப்பட்ட அரசு துறைகளுக்கு அழுத்தம் தர முன்வர வேண்டும்.