20.12.2023 விசுவக்குடி முதல் வீதியில் பழைய மின்கம்பிகளுக்கு பதிலாக புதிய மின்கம்பிகள் மாற்றப்பட்டது. அதன் காரணமாக மின்தடை ஏற்பட்டது.
18-07-2015 விசுவக்குடி, முகமது பட்டிணம் வழி சாலையை சீரமைக்க கோரி முகமது பட்டிணத்தில் சாலை மறியல் நடைப்பெற்றது.
07-08-2014 விசுவக்குடி பகுதியில் உள்ள மோசமான சாலைகளை சீரமைக்க கோரி பொது மக்களின் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது .
21-11-2014 தமிழகத்தில் ஜல்லிகட்டுகான தடையை நீக்க கோரி விசுவக்குடி இஸ்லாமிய இளைஞர்கள் அரசை வலியுறுத்தும் விதமாக பேரணி நடத்தினர்.
29-07-2014 விசுவக்குடியில் புனித ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.
27.07.2014 விசுவக்குடியில் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்வில் பெரம்பலூர் மாவட்டம் தே.மு.தி.க மாவட்ட செயலாளர் துரை காமராஜ் கலந்து கொண்டார்.
18-07-2014 விசுவக்குடியில் காதலிக்கிறேன் என்கிற படத்தின் காட்சிகள் இன்று படமாக்கப்பட்டது. ஊராட்சியின் தலைவர் குதரத்துல்லா அவர்கள் குணசித்திர வேடத்தில் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டது
15.07.2014 விசுவக்குடி அல் -அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
12-07-2014 விசுவக்குடியின் புதிய பள்ளிவாசல் கட்டிட பணிகள் ஆரம்பம் செய்யப்பட்டது.
30-06-2014 விசுவக்குடியில் ரமலான் உற்சாக ஆரம்பம்
23-06-2014 விசுவக்குடி பகுதியில் உள்ள பழுதான சாலைகள் சீரமைக்க வேண்டி கலெக்டரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு அளித்தது.
28-05-2015 விசுவக்குடி தீனியாத் வழிகாட்டி மையம் நடத்திய கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
29-05-2014 மோசமான சாலையை சீரமைக்கவும், கூடுதல் பேருந்துகளை இயக்கவும் முதல்அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பட்டது.
24-04-2014 விசுவக்குடியில் நடைப்பெற்ற 16வது மக்களவை தேர்தலில் 72% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் உள்ள 1021 வாக்குகளில் 720 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில் ஆண்கள் வாக்கு 307, பெண்கள் வாக்கு 413 ஆகும்.
22-04-2014 பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து விசுவக்குடி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
25-.02-2014 குவைத்தின் 53 வது தேசிய தினத்தை முன்னிட்டு குவைத்தில் மட்டைபந்து போட்டிகள் நடைப்பெற்றது. குவைத் இஸ்லாமிய சங்கம் நடத்திய இப்போட்டியில் விசுவக்குடி அணி வெற்றி பெற்றது.
08-09-2013 தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பெரம்பலூர் கிளை சார்பாக விசுவக்குடியில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
03-02-2013 விசுவக்குடியில் முஸ்லிம்களால் புதிதாக நிர்மாணிக்கப் பெற்ற பிரமாண்டமான அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைப்பெற்றது.
29-01-2013 விசுவக்குடியின் ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீத் அவர்கள் இறந்தார். 12 ஆண்டுகளுக்கும் மேலாக விசுவக்குடியின் ஜமாத் தலைவராக இருந்து முஸ்லிம்களை வழிநடத்தி வந்தவர்.
11-05-2012 விசுவக்குடி பள்ளிவாசல் தொடர்பான நிலங்களை குத்தகை விட்டதில் குவைத்வாழ் விசுவக்குடி மக்கள் அதிர்ப்தி வெளிப்படுத்தினர் தலைவர் முகமது மீராசா கடிதமும் எழுதினார்.
17-03-2012 மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா விசுவக்குடி பகுதியில் நீர்த்தேக்கம் அமைய சட்டமன்றத்தில் உரையாற்றுவதாக விசுவக்குடி நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார்.
11-12-2011 தமுமுக வின் சார்பில் பண்பு ஒழுக்க பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
11-11-2011 மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்திட்டம் அமையும் இடத்தை பார்வையிட்டார்.
18-03-2011 விசுவக்குடி பகுதியில் புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 3.25 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கப்பட்டது.
01-01-2011 விசுவக்குடியில் புத்தாண்டு அன்று இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்ப்பட்டது.
01-01-2011 விசுவக்குடியில் புத்தாண்டு அன்று இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்ப்பட்டது.
29-12-2010 தமுமுக வின் சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது.
29-12-2010 விசுவக்குடியில் வார்டுகள் சீரமைக்கப்பட்டன.
04-12-2010 அன்னமங்கலத்தில் உள்ள சிறுமலர் மேல்நிலை பள்ளியின் 50ம் ஆண்டை முன்னிட்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. இதில் விசுவக்குடியின் முன்னால் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
15-12-2010 பொது மக்களின் பயன்பாட்டிற்கான சமுதாயக்கூடத்தின் அடிக்கல் நாட்டு விழா இமாம் சுலைமான் ரஹ்மானி அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
10-12-2010 நேருயுவ கேந்திராவின் கிளை விசுவக்குடியில் துவக்கப்பட்டது.
10-10-2010 விசுவக்குடியில் உணவு அருந்தும் கூடமாக பயன்பட்டு வந்த அரங்கம் முற்றிலும் இடிக்கப்பட்டது.
08-10-2010 மழைவேண்டி இஸ்திஸ்கா தொழுகை தொழப்பட்டது.
21-09-2010 பெரம்பலூர் மாவட்டம் தப்லீக் ஜமாத் அரும்பாவூர் வட்டம் (ஹல்க்கா) சார்பாக விசுவக்குடியில் அறநெறி பிரச்சார கருத்தரங்கம் (ஜோட்) நடத்தியது.
20-09-2010 பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் கல்லூரியின் சமூகபணித்துறை மாணவர்கள் மற்றும் பெரம்பலூர் வேல்ட் விஷன் இணைந்து கிராம விழிப்புணர்வு முகாம் 5 நாள் நடத்தியது.
18-09-2010 விசுவக்குடியில் இஸ்லாமியர்களின் பயன்பாட்டிற்கு சமுதாயக்கூடம் அமைப்படும் என முடிவு செய்யப்பட்டது.
24-08-20010 ரமலான் 13ல் தமுமுக வின் சார்பில் இப்தார் விருந்து பள்ளிவாசலில் வழங்கப்பட்டது.
10-08-2010 புதிய பள்ளிவாசல் கட்டுதல், கிராம முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற குறிப்பிட்ட பணியை நோக்கமாக கொண்டு வேலை செய்யும் நிர்வாகக்குழு ஏற்படுத்தப்பட்டது.
10-10-2009 கோவை செய்யது அவர்களின் எழுச்சிமிகு உரையுடன் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தை தமுமுக நடத்தியது.
27-02-2009 தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் பாதுகாப்பு இயக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் விசுவக்குடியில் கொடியேற்றத்துடன் உதயம்.
16-11-2008 http://visvakudi.blogspot.com என்ற முகவரியில் விசுவக்குடி வளைபதிவு துவக்கம்.