அக்டோபர் 31, 2015

பிள்ளையார் பாளையத்தில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி அருகே உள்ள பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் செம்படையான்(வயது50) விவசாயி. இவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொட்டகையில் ஆடுகளை கட்டிவிட்டு செம்படையான் வீட்டிற்கு வந்து விட்டார்.

நேற்று காலை வழக்கம் போல் சென்று பார்த்த போது 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடப்பதையும், 2 ஆடுகள் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதையும் கண்டு

அக்டோபர் 16, 2015

விசுவக்குடியில் "அம்மா திட்ட" முகாம்

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை  வட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடியில் அம்மா திட்ட முகாம் நடைப்பெற்றது.

வருவாய்த்துறை அலுவலர்கள் குழு இன்று வெள்ளிக் கிழமை மதியம் மக்களுடைய குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று, ஓய்வூதியம், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்று, வருமானம் மற்றும் இருப்பிடச்சான்றிதல், குடும்ப அட்டை வழங்குதல் ஆகிய கோரிக்கை அடங்கிய விண்ணப்பங்களை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
இந்த முகாமில் வருவாய் அலுவலர்கள் மற்றும் அன்னமங்கம் ஊராட்சி மன்ற தலைவர் குதரத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.