ஏப்ரல் 19, 2020

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அன்னமங்கலம் ‘இளைஞர் குழு’ அசத்தல்

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் பல்வேறு விதமான கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் அந்த ஊர் இளைஞர்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அன்னமங்கலத்தில் உள்ள "இயற்கை இளைஞர்கள்" என்ற குழு சமூக விலகல் குறித்த விழிப்புணர்வு, வாகன தணிக்கை, இலவசமாக மாஸ்க் வழங்குதல், கிருமி நாசினி தெளித்தல், பொதுமக்களை ஒழுங்கு படுத்துதல், கபசுர நீர் வழங்கல், ஊரடங்கு சமயத்தில் உலாவரும் இளைஞர்களை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் சுயமாக ஈடுபட்டு வருவது மட்டுமில்லாமல் ஊராட்சியில் உள்ள மற்ற கிராமங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்றனர். வாழ்த்துக்கள்.


Previous Post
Next Post

post written by: