கொரோனா வைரஸ் (COVID-19) தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. காரணம், மனிதர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதால், மக்கள் கூட்டம் கூட்டமாக சங்கமிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அரசு கட்டுபடுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி பள்ளிவாசலிலும் தொழுகைகள் நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது.
மேலும் தொழுகைக்கான பாங்கு (அழைப்பு) ஐவேளையும் மசூதிகளில் ஒலிக்கும். அதனைத் தொடர்ந்து, அவரவர் வீட்டில் இருந்தபடி தொழுது கொள்ளும்படி ஜமாத் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு பள்ளிவாசல் முன்பு இன்று (மார்ச் 24) அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

