விசுவக்குடி பள்ளிவாசலில் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 24) ஜமாத் கூட்டம் நடைபெற்றது. இதற்கு அத்-தக்வா பள்ளிவாசலின் இமாம் மௌலானா முஹம்மது சுலைமான் அவர்கள் தலைமை ஏற்றார்.
இதில் ஜமாத் பொருளாளர் ஓய்வு ஆசிரியர் அமானுல்லா அவர்கள் வரவு செலவு கணக்கிணை வாசித்து காண்பித்தார். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய தலைவராக இப்ராஹிம் (சுருட்டை) அவர்களும், துணை தலைவராக போலிஸ் ஓய்வு சபியுல்லா அவர்களும், செயலாளராக முஸ்தபா அவர்களும், துணை செயலாளராக அப்துல் கரீம் (சாலி) அவர்களும் மற்றும் பொருளாளராக ஓய்வு ஆசிரியர் அமானுல்லா அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
