ஏப்ரல் 19, 2020

துப்புரவு பணியாளர்களை கௌரவித்த ஊராட்சி தலைவர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் வேலை பார்த்து வரும்  துப்புரவு பணியாளர்கள் உட்பட 25 தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.

அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள சாலைகள் மற்றும் தெருவில் இருக்கும் குப்பைகளை அகற்றுதல். சாக்கடைகளை  சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை துப்புரவு தொழிலாளர்கள் அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர்.

அவர்களை கௌரவிக்கும் வகையில் தன் சொந்த செலவில் அன்னமங்கலம் ஊராட்சி தலைவர் மருதாம்மாள் செல்வகுமார் சுமார் 10 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை இன்று (ஏப்ரல் 19) ஊராட்சி அலுவலகத்தில் வழங்கினார்.

இந்த செயல் இப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் அனுசியா மேரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
Previous Post
Next Post

post written by: