விசுவக்குடியில் உள்ள ஹழ்ரத் முகமது அலி அவர்களின் மகன் ஜமால் முஹம்மது (32) சவூதி அரேபியாவில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் வபாத் ஆனார்.
இவர் சவூதி அரேபியா ரியாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கனரக வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் சவூதி அரேபியா வந்து ஒரு ஆண்டு காலம் ஆன நிலையில் இந்த சாலை விபத்து இடம் பெற்றுள்ளது.






