டிசம்பர் 22, 2015

பச்சைமலை - பல தகவல்கள்


1. தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் பச்சைமலையும் ஒன்று.

2.வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ள பச்சைமலை சுமார் 19 ஆயிரத்து 76 ஹெக்டேர் பரப்பில் விரிந்துள்ளது.

3. இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 1072 மீட்டர் வரை உயரம் கொண்டது.

4. பச்சைமலை பரப்பளவில் சுமார் 527 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

5. பச்சைமலையில் வாழும் மக்களை பச்சை மலையாளி எனவும் அழைகின்றனர்.

6. பச்சைமலைவாழ் மக்கள் பெரும்பாலும் கவுண்டர் சாதி இனத்தை
சார்ந்தவர்கள்.

7. பச்சைமலையில் 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 1991ம் ஆண்டு  கணக்கின்படி மக்கள் தொகை 10, 774 ஆகும்.

8. பச்சைமலையில் வாழும் மக்கள் தங்களை 4 நாடுகளாக பிரித்து சுட்டி காட்டுகின்றனர். அவை *தென்புறநாடு *ஆத்திநாடு *வன்னாடு *கோம்பை நாடு

9. பச்சைமலையில் வாழும் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். இதில் முந்திரி, மரவள்ளி கிழங்கு முதன்மையானது.

10. பச்சைமலையில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

11. பச்சைமலையில் உள்ள மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக டாப் செங்காட்டுப்பட்டி, செம்புளிச்சாம்பட்டி ஆகிய இடங்களில் அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன.

12. பச்சைமலையில் புத்தூர், ஓடைகாட்டு புதூர், டாப் செங்காட்டுப்பட்டி ஆகிய இடங்களில் மூன்று மருத்துவமனைகள் உள்ளது.

13. தமிழக அரசு பச்சைமலையை சுற்றுலா தளமாக அறிவித்துள்ளது. கடந்த நவம்பரில் இருந்து சுற்றுலா துறை மூலம் சுற்றுலா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

14. பச்சைமலையில் 35 காப்பு காடுகள் இருக்கிறது.

15. இம்மலையில் 154 விதமான பறவை இனங்களும், 135 விதமான பட்டாம்பூச்சி வகைகளும் உள்ளன.

16. பச்சைமலையில் 3 மான்கள் வாழிடத்தில் நூற்றுக்கணகான மான்கள் வாழ்கின்றன.

17. இம்மலையில் மழைகாலத்தில் பெருகெடுக்கும் மங்களம் அருவி, கோரையாறு அருவி, மயிலூற்று அருவி போன்ற அருவிகள் உள்ளன.

18. பச்சைமலையில் மலையேற்றம் செய்வதற்கு கனபாடி - கன்னிமார் சோலைபாதை, கனபாடி - இராமநாதபுரம் பாதை ஆகிய இருபாதைகள் உள்ளதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19. பச்சைமலை கீழ்கரை கிராமத்தில் உள்ள ஏரியில் சுற்றுலா துறை சார்பாக படகு சவாரி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

20. பச்சைமலையில் உள்ள சோலைமதி காட்டில் இந்திய சாம்பல் அணிகள் காணப்படுகின்றன.

21. கல்லாறு, சின்னாறு போன்ற நதிகள் பச்சைமலையில் உற்பத்தியாகிறது.

22. பச்சைமலையில் உற்பத்தியாகும் கல்லாற்றில் விசுவக்குடி அருகே 40 மில்லியன் கனஅடி நீரை தேக்கும் விதமாக நீர்த்தேக்கம் அமைக்கபட்டுள்ளது.

23. பச்சைமலையில் காட்டு பூனை, மரநாய், மலைப்பல்லி, மயில், குரங்கு, பறவைகளை கொல்லும் சிலந்தி, கண்ணாடி விரியன் பாம்பு ஆகிய உயிரினங்கள் வாழ்கின்றன.

24. பச்சைமலையின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு டாப் செங்காட்டுப்பட்டி, கீழ்கரை, கன்னிமார் சோலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா துறை சார்பாக பார்வை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

25. பச்சைமலையில் உற்பத்தியாகும் தேனை தமிழக அரசே கொள்முதல் செய்யும் என அறிவித்துள்ளது.

26. பச்சைமலையில் இரண்டு ஊராட்சிகள் உள்ளன. அவை *வன்னாடு ஊராட்சி *கோம்பை ஊராட்சி

27. பச்சைமலையில் உள்ள ஊராட்சிகள் துறையூர் சட்டமன்ற தொகுதியிலும், பெரம்பலூர் மக்களவை தொகுதியிலும் அடங்கும்.

28. திருச்சி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் பச்சைமலைக்கு செல்ல துறையூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
Previous Post
Next Post

post written by: