டிசம்பர் 20, 2015

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி விசுவக்குடியில் தமுமுக நடத்துகிறது

விசுவக்குடியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி அல் - ஜன்னத் சமுதாய நலக்கூடத்தில் வருகிற 27ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.

காலை 9:30 மணியளவில் தொடங்கும் நிகழ்ச்சியில் அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் பா.செல்வகுமார் அவர்களும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்
முன்னாள் மாநில மாணவரணி செயலாளர் மருத்துவர் சர்வத்கான் அவர்களும் பங்கு பெறுகின்றனர்.

பின்னர் மாணவர்களின்  சந்தேகங்களுக்கு கேள்வி - பதில் மூலமும் விளக்கம் அளிக்க உள்ளனர்.

மாணவ மாணவிகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு குடும்பத்தினர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் விசுவக்குடி கிளை சார்பாக அழைப்பு விடுக்கப்படுகிறது.

Previous Post
Next Post

post written by: