பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஹம்மது பட்டினம் கிளை சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இன்று வெள்ளி கிழமை (Nov 10, 2015) மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஷேக் ராஸித் தலைமை தாங்கினார்.
இணைவைப்பு (ஷிர்க்) ஒரு பெறும் பாவம் எனும் தலைப்பில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட திருச்சி மாவட்ட துணைத்
செயலாளர் சகோ.ரபியுத்தீன் உரை நிகழ்த்தினார்.
செயலாளர் சகோ.ரபியுத்தீன்
முஹம்மது பட்டின கிளை பொறுப்பாளர்கள் அப்துல் ஹக்கீம், சகத்துல்லா, முஹம்மது யாசீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விசுவக்குடி, முஹம்மது பட்டினம் பகுதியை சேர்ந்த சுமார் 65 க்கும் மேற்ப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக் கொண்டனர்.
பள்ளிவாசல் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு இறுதி நேரத்தில் ஜமாத்தார்கள் அனுமதி மறுத்தனர். இதனால் நிகழ்ச்சி மாற்று இடத்தில் திட்டமிட்டபடி நடைப்பெற்றது
