பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று (19) நடைப்பெற்றது.
வடக்கு மாதவி சாலையில் உள்ள NSK மஹாலில் மாலை 4 மணிக்கு நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் முஹம்மது இலியாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விசுவக்குடி குதரத்துல்லா, மண்டல தேர்தல் அதிகாரி மீரான் மொய்தீன், மாநில தேர்தல் ஆணையர் தாஹிர் பாஷா, மனிதநேய
மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் மொய்தீன் ஆகியோர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் முன்னால் வஃக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு தனியே டவுன்காஜி நியமிக்க வேண்டும். இதை போல் முஸ்லிம் பெண்கள் மேம்பாட்டு குழு அமைக்க வேண்டும்.
வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்களத்திலிருந்து விசுவக்குடி, முஹம்மது பட்டினம் வழியாக பிள்ளையார்பாளையம் வரை உள்ள சாலை போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. எனவே அந்த பகுதி மக்களின் நலன்கருதி சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.
பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அனைத்து சிறைக் கைதிகளையும் மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்ய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
