ஜூன் 23, 2014

விசுவக்குடி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க மமக ஆட்சியரிடம் மனு

திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அரங்கிள் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனிதநேய மக்கள் கட்சி பழுதான சாலையை சீரமைக்க வேண்டி கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்தது.

பெரம்பலூர் மாவட்டம் எசனையிலிருந்து அன்னமங்கலம் ஊராட்சி பிள்ளையார் பாளையம் வரை உள்ள தார் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது.

சுமார் 8 கிலோமீட்டர் உள்ள இந்த சாலையை, பிள்ளையார் பாளையம், முகமது பட்டினம், விசுவக்குடி மற்றும் அன்னமங்கலத்தில் உள்ள சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமாக மக்கள் இந்த சாலையில் பயணம் செய்யவும்
பொருட்களை எடுத்து செல்லவும் மற்றும் பிற காரணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகள் பெயர்ந்து கிடக்கும் கரடுமுரடான கற்களினால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சாலைகள் மிக மோசமாக இருப்பதால் அரசு பேருந்துகளும் தாமதமாக வருவகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாமல் மிகவும் பாதிக்கபடுகின்றனர்.

இந்த குண்டும் குழியுமான சாலையில் பயணம் செய்யவதால் வாகனங்கள் பழுதாவது மட்டுமில்லாமல் நோயாளிகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே இந்த குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ள இந்த 8 கிலோ மீட்டர் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கமாறு மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Previous Post
Next Post

post written by: