விசுவக்குடி தீனியாத் வழிகாட்டி மையம் நடத்திய கோடைகால பயிற்சி முகாம் நிறைவுவிழா (28.05.2014) புதன் அன்று அல்-ஜன்னத் சமுதாய நலகூடத்தில் நடைப்பெற்றது.
விசுவக்குடி பள்ளிவாசலின் இமாம் முஹம்மது சுலைமான் அவர்கள் இறைமறையுடன் தொடங்கிய நிகழ்ச்சி, அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்ட ஈரோடு முஹம்மது தவ்ஃபீக் ஹஸனி கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், பெரம்பலூர் நூர்
பள்ளிவாசலின் இமாம் முஹம்மது முஸ்தபா குழந்தை வளர்ப்பும், பெற்றோரின் கடமை என்ற தலைப்பிலும், விசுவக்குடி இஸ்லாமிய பிரசாரகர் ஜமால் முஹம்மது வழிபாட்டின் அவசியம் என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர்.
இந்த கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர். மேலும் விசுவக்குடியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரென்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
விசுவக்குடி தீனியாத் வழிகாட்டி மையத்தின் மேலாளர் வதூத் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியை பொறியாளர் சபியுல்லா வரவேற்றார். இறுதியாக ஓய்வு ஆசிரியர் அமானுல்லா நன்றி கூறினார்.
