செப்டம்பர் 21, 2010

நிர்வாகக்குழுவில் மாற்றம் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடு

 புதிய பள்ளிவாசல் கட்டுதல், கிராம முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்  போன்ற குறிப்பிட்ட பணியை நோக்கமாக கொண்டு வேலை செய்யும் நிர்வாகக்குழு கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி விசுவக்குடியில் ஏற்படுத்தப்பட்டது. அனைத்து செயல்களையும் ஜமாத்தும் நிர்வாகக் குழுவும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது ஒரு மாதமே ஆன நிலையில் நிர்வாகக்குழு நிர்வாகிகளை மாற்றம் செய்யதுள்ளது.

    முதல் தலைவராக இருந்த ஓய்வுஆசிரியர் அமானுல்லா அவர்கள் பொருளாளராகவும், பொருளாளராக இருந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குதரதுல்லா அவர்கள் செயற்க்குழு உறுப்பினராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    புதிய தலைவராக முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    துணைத்தலைவர்களாக இருந்த தொழில்அதிபர் கலிபுல்லா மற்றும் அல்அமீன் டிராவல்ஸ் நிர்வாகி சபியுல்லா ஆகியோர்களில் தொழில் அதிபர் கலிபுல்லாவிற்கு பதிலாக துணைச்செயலாளராக இருந்த ரைஸ்மில் இயக்குனர் அப்துல் அலீம் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு துணைதலைவர் பதவியில் மாற்றமில்லை.

    செயலாளராக இருந்த ஏ.எம்.ஏஜென்சியின் நிறுவனர் முஸ்தபா பதவியில் மாற்றமில்லை. துணைச்செயலாளராக பஜாஜ் காப்பீட்டு நிறுவன அலுவலர் வதூத் அவர்கள் தொடர்ந்து செயல்படுவார்.

    நிர்வாக செயற்க்குழு  உறுப்பினர்களில் பெரிய அளவில் மாற்றமில்லை. இந்த அதிரடி மாற்றம் பற்றி ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீது அவர்களிடம் கேட்டபோது பதில் கூற மறுத்துவிட்டார்.

புதிய நிர்வாகிகள் பட்டியல்:

நிர்வாகக்குழு பொறுப்பாளிகள்:

        தலைவர்                          -    அ.அப்துல் ஹக்
        துணைதலைவர்கள்       -    அ.அப்துல் அலீம், எச்.சபியுல்லா
        செயலாளர்                      -    அ.முஸ்தபா
        துணைச்செயலாளர்       -    அ.வதூத் (எ) குதரத்துல்லாஹ்
        பொருளாளர்                   -    அ.அமானுல்லாஹ்

செயற்க்குழு உறுப்பினர்கள்:

•    ப.அலியார்
•    மு.முகமது யாகூப்
•    சையத் முஸ்தபா
•    சை.அப்துல் கபூர்
•    தௌ.முஹம்மது ஜகரிய்யா
•    தாவூத்
•    அ.அப்துல் ரஹ்மான்
•    எம்.கலிபுல்லா
•    அ.அப்துல் அஜிஸ்
•    மௌலானா அ.முகமது அலி
•    கோ.அப்துல் கரீம்
•    சாஹூல் ஹமீது
•    முகமது முஸ்தபா
•    அப்துல் பாசித்
•    சி.ஐ.டி. சபியுல்லா
•    மு.குதரத்துல்லா
•    அப்துல் முத்தலீப்
•    நா.முஸ்தபா
செய்தி : தௌ.மு.ஜகரிய்யா

Previous Post
Next Post

post written by: