விசுவக்குடியில் புதிய பள்ளிவாசல் கட்டும் பணியை நோக்கமாக கொண்டு வேலை செய்யும் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் பொதுக்குழு 18.09.2010 சனிகிழமை அன்று இரவு விசுவக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் நடைப்பெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வை பள்ளியின் இமாம் மௌலான சுலைமான் ரஹ்மானி அவர்கள் இறைமறை ஓதி துவங்கி வைத்தார். நிர்வாக கமிட்டியின் செயற்க்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
ஓய்வு ஆசிரியர் அமானுல்லா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் செயற்க்குழு உறுப்பினர்கள் புதிய மண்டபம் நிர்மானிப்பது சம்மந்தமாக தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.
பள்ளிவாசல் அருகில் உள்ள பழைய பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய மண்டபம் கட்டுதல்.
மண்டபம் அமைப்பதற்கான திட்டம், மதிப்பீடு செய்வதற்கு கட்டுமான நிறுவனங்களை அணுகி கட்டிட பொறியாளர்களிடம் விவரம் அறிவது.
பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் காலி இடங்களை தேர்வு செய்து அதில் வீட்டுமனைகள் அமைப்பது போன்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
விசுவக்குடியில் உள்ள குடும்பம் ஒவ்வொன்றும் குறைந்தது ரூபாய் மூன்றாயிரம் நன்கொடையாக பெறுவது என தீர்மானிக்கப்பட்டது. அடுத்த செயற்க்குழு அக்டோபர் 9-ம் தேதி நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் விசுவக்குடியை சார்ந்த ஜமாத்தார்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்.
இறுதியாக நிர்வாக கமிட்டியின் துணைதலைவர் சபியுல்லா நன்றி கூறினார்.
செய்தி : தௌ.மு.ஜகரிய்யா
