டிசம்பர் 16, 2010

விசுவக்குடியில் நேருயுவகேந்திரவின் திறப்பு விழா


பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் ஊராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியான விசுவக்குடி பகுதியில் நல்வழி இளைஞர்கள் நற்பணி மன்றம் என்ற பெயரில் இந்திய அரசின் இளைஞர்நலம் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திர அமைப்பின் திறப்பு விழா 10.12.2010 வெள்ளி அன்று நடைப்பெற்றது.

பள்ளிவாசல் அருகில் உள்ள பெண்கள் மதரஸாவில் நடைப்பெற்ற இவ்விழாவை பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நேரு யுவ கேந்திர
ஒருங்கிணைப்பாளர் கமால் பாட்ஷா தலைமை ஏற்று நடத்தி வைத்தார். விசுவக்குடி ஜமாத் தலைவர் அப்துல் ஹமீது, பள்ளிவாசல் நிர்வாகக்குழு செயலாளர் முஸ்தபா, ஓய்வு ஆசரியர் அமானுல்லா,  மற்றும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் குதரத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் ஜேக்கப் அருள்தாஸ், மன்ற கௌரவ ஆலோசகர் சாகுல் ஹமீது, மன்ற ஆலோசகர் சைபுல்லா, மன்ற செயற்க்குழு உறுப்பினர் குதரத்துல்லா போன்றோர் வாழ்த்தி பேசினர். நெறியாளர்களாக சிறுமலர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெஞ்சமின் மற்றும் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

இதில் இளைஞர் பெரியவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியை மன்ற பொருளாளர் ஜியாவுதீன் வரவேற்றார். இறுதியாக நல்வழி இளைஞர் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஜலாலுதீன் நன்றி கூறினார்.
படங்கள் தௌ.மு.ஜகரிய்யா
Previous Post
Next Post

post written by: