விசுவக்குடி இக்ரா தீனியாத் பாட சாலையின் இரண்டாம் ஆண்டு விழா வருகிற 28ம் தேதி வெள்ளி கிழமை நடைபெறுகிறது.
விசுவக்குடி அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறும் இந் நிகழ்வை பெரம்பலூர் மாவட்ட ஜமாத்துல் உலாமா சபை தலைவர் மௌலானா முஹம்மது முனீர் தலைமை ஏற்று நடத்துகிறார்.
விசுவக்குடி ஜமாத் தலைவர் முஹம்மது மீரா, பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் முதல்வர் மௌலானா இஹ்ஷானுல்லா, மௌலானா அப்துல் ஹை போன்றோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.
ஐக்கிய நலக் கூட்டமைப்பின் செயலாளர் மற்றும் அன்வாருல் சைஃப்பா மக்தப் வழிகாட்டியின் பொறுப்பாளர் முஹம்மது ரஃபீ ஹாஜியார் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.
மேலும் மாணவ, மாணவியரின் செயல் திறனை வெளிபடுத்தும் விதமாக நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
பெண்களுக்கு தனி இடவசதி செய்யபட்டுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விசுவக்குடி ஜமாத், அல்- அமீன் இளைஞர்கள் சங்கம் மற்றும் இக்ரா தீனியாத் பாடசாலை சார்பாக அழைப்பு விடுக்கப்படுகிறது.

