விசுவக்குடி புதிய ஜமாத் தலைவராக சேட் (எ) முஹம்மது மீரா (07.04.2017) அன்று தேர்வாகி உள்ளார். விசுவக்குடியை பூர்வீகமாக கொண்டவர். தற்போது இங்குள்ள முஸ்லிம்களை வழிநடத்தி செல்பவர்.
14-04-1972 ஆம் ஆண்டு ஜெய்னுலாப்தீனுக்கும், உம்மு சல்மாபிக்கும் மூன்றாவது மகனாக பிறந்தவர்.
இவருக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர். இவரின் தந்தை தமிழக காவல்துறையில் பணியாற்றியவர்.
10ம் வகுப்புவரை அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலை பள்ளியிலும், தஞ்சாவூரில் தொழில்நுட்ப கல்வியும் பயின்றவர்.
திருகுரான் படிக்க தெரிந்தவர். ஐந்து வேளைகள் தொழுகையை நிறைவேற்ற கூடிய மார்க்கபற்று உள்ளவர்.
இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். 25 ஆண்டுகள் சவூதி அரேபியாவில் பணியாற்றியவர்.
சமூக ஆர்வலரான இவர் தன்னுடைய மூத்த மகளை பொறியியல் பட்டதாரியாகவும் உருவாக்கி வருகிறார்.
புதிதாக ஜமாத் தலைவராக பொறுபேற்றுள்ள இவர் நிர்வாகத்தில் வெளிபடை தன்மை கடைபிடிக்கபடும் என தெரிவித்து வருகிறார்.
சிறப்பாக செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு தருமாறும் கேட்டு கொண்டார்.
