விசுவக்குடியின் ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீத் அவர்கள் இறந்த செய்தி அறிந்து விசுவக்குடி மக்கள் பேரதிர்ச்சியும், வேதனையும், துயரும் அடைந்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விசுவக்குடி ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீது அவர்கள் சிகிச்கைகாக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார்.
இன்று (29.01.2013) இரவு இந்திய நேரப்படி 7:30 மணியவில் சிகிச்சை பலனின்றி
அவர் உயிர்பிரிந்தது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.)
அவர் உயிர்பிரிந்தது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.)
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக விசுவக்குடியின் ஜமாத் தலைவராக இருந்து முஸ்லிம்களை வழிநடத்தி வந்தவர். தன்னால் இயன்றளவு விசுவக்குடியின் முன்னேற்றதிற்காக தொண்டாடற்றியவர்.இளைஞர்களை கவர்ந்தவர், தீய எண்ணங்கள் இல்லாதவர்.
அவருடைய உடல் நாளை மதியம் 2:30 மணியளவில் நல்லடக்கம் செய்யபடுகிறது. இவருடைய மறுமை வாழ்விற்காக இறைவனை பிரார்த்திபோமாக...!
நன்றி
அமானுல்லாஹ்
(ஓய்வு ஆசிரியர்)