![]() |
| கல்வெட்டில் இருக்கும் ரிப்பனை வெட்டி புதிய அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைக்கிறார் இஹ்சானுல்லாஹ். |
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் முஸ்லிம்களால் புதிதாக நிர்மாணிக்கப் பெற்ற பிரமாண்டமான அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடம்
திறப்பு விழா 03-02-2013 அன்று மிகவும் கோலகலமாக நடைப்பெற்றது.
திறப்பு விழா 03-02-2013 அன்று மிகவும் கோலகலமாக நடைப்பெற்றது.
நல்ல காற்றோட்டமான இடத்தில் அமைந்துள்ள இந்த புதிய சமுதாய நலக்கூடத்தின் திறப்பு விழா பெரம்பலூர் ஜாமிய ஜன்னத்துன் நிஸ்வானின் முதல்வர் அப்துல் ஹை அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
![]() |
| Md. Shareef Yusufi Trichy |
விசுவக்குடி பள்ளிவாசலின் இமாம் முஹம்மது சுலைமான் அவர்கள் இறைமறையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில். பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் இஸ்லாமிய அரபிக் கல்லூரியின் தலைவர் அப்துல் காதிர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஜமாத்துல் உலாமா சபையின் தலைவர் முஹம்மது முனீர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஜமாத்துல் உலாமா சபையின் செயலாளர் முஹம்மது ஸல்மான், விசுவக்குடி துணை ஜமாத் தலைவர் காதர் அலி, முன்னாள் ஜமாத் தலைவர் முஹம்மது அலி, அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் குதரத்துல்லா ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.
புதிய சமுதாய நலக்கூடத்தில் நடைப்பெறும் முதல் நிகழ்வாக முகமது நபியின் பிறந்த தினமாக கருதப்படும் மிலாத் விழா கொண்டாடப்பட்டது. திருச்சியில் உள்ள முஹம்மது பூறா பள்ளியின் தலைமை இமாம் முஹம்மது ஷரீப் யூசுபி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகமது நபி அவர்களை பற்றி சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சியின் இடையிடையில் விசுவக்குடி அல்-அமீன் இளைஞர் சங்கம் நடத்திய இஸ்லாமிய கலை இலக்கிய போட்டியில் வென்ற சிறுவர்-சிறுமியர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இந்த பரிசுகள் இறந்த ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீது அவர்களை கௌரவ படுத்தும் விதமாகவும், நினைவாகவும் வழங்கப்பட்டது.
சுமார் ஐந்நூறுக்கும் அதிகமானோர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார், பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் அரபி கல்லூரியின் முதல்வர் இஹ்சானுல்லா.
ஆண்கள், பெண்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் கந்தூரி விருந்து வழங்கி உபசரிக்கப்பட்டது. இதில் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
அல்-அமீன் இளைஞர்கள் சங்க சகோதரர் முஹம்மது யாசீன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியை அல்-அமீன் இளைஞர் சங்க சகோதரர் ஜலாலுதீன் வரவேற்றார். இறுதியாக விசுவக்குடி இரண்டாவது வார்டு உறுப்பினர் முஸ்தபா அவர்கள் நன்றி கூறினார்.
செய்தி: அ.சபியுல்லா (பொறியாளர்)
படங்கள்: ச.முஹம்மது யாசீன்


